caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 26

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:26

قَالَ فَإِنَّهَا مُحَرَّمَةٌ عَلَيْهِمْ أَرْبَعِينَ سَنَةً يَتِيهُونَ فِى ٱلْأَرْضِ فَلَا تَأْسَ عَلَى ٱلْقَوْمِ ٱلْفَٰسِقِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"நிச்சயமாக அது அவர்கள் மீது தடுக்கப்பட்டதாகும். நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் திக்கற்றலைவார்கள். ஆகவே, பாவிகளான சமுதாயத்தின் மீது கவலைப்படாதீர்!” என்று (மூஸாவுக்கு அல்லாஹ்) கூறினான்.
Tamil Translation - Omar Sharif“ஆக, நிச்சயமாக அ(ந்த நகரமான)து அவர்கள் மீது தடுக்கப்பட்டுவிட்டது. நாற்பது ஆண்டுகள் (அவர்கள்) பூமியில் திக்கற்று அலைவார்கள். ஆகவே, பாவிகளான மக்கள் மீது நீர் கவலைப்படாதீர்!’’ என்று (மூஸாவுக்கு அல்லாஹ்) கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi26. (அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட) ‘‘அந்த இடம் நாற்பது வருடங்கள் வரை அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டு விட்டது. (அதுவரை) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வார்கள். ஆகவே, (இந்தப்) பாவிகளான மக்களைப் பற்றி நீர் கவலை கொள்ளாதீர்!'' என்று (மூஸாவுக்குக்) கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70