caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Maaida அத்தியாயம், வசனம் 28

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 112 · 5:28

لَئِنۢ بَسَطتَ إِلَىَّ يَدَكَ لِتَقْتُلَنِى مَآ أَنَا۠ بِبَاسِطٍ يَدِىَ إِلَيْكَ لِأَقْتُلَكَ إِنِّىٓ أَخَافُ ٱللَّهَ رَبَّ ٱلْعَٰلَمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீ என்னைக் கொல்வதற்காக உன் கரத்தை என்னளவில் நீட்டினாலும் உன்னைக் கொல்வதற்காக என் கரத்தை உன்னளவில் நான் நீட்டுபவனாக இல்லை. நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்.
Tamil Translation - Omar Sharif“நீ என்னைக் கொல்வதற்காக உன் கரத்தை என்னளவில் நீட்டினாலும் உன்னைக் கொல்வதற்காக என் கரத்தை உன்னளவில் நான் நீட்டுபவனாக இல்லை. நிச்சயமாக நான் அகிலத்தாரின் இறைவனாகிய அல்லாஹ்வைப் பயப்படுகிறேன்.”
Tamil Translation - Abdulhamid Baqawi28. ‘‘நீ என்னை வெட்டுவதற்காக உன் கையை என்னளவில் நீட்டினா(ல், அந்நேரத்தி)லும் நான் உன்னை வெட்டுவதற்காக என் கையை உன்னளவில் நீட்டவே மாட்டேன். ஏனென்றால், நிச்சயமாக நான் உலகத்தார் அனைவரையும் படைத்து வளர்த்து பாதுகாப்பவனாகிய அல்லாஹ்வுக்கு அஞ்சுகின்றன்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70