ذَٰلِكَ أَدْنَىٰٓ أَن يَأْتُوا۟ بِٱلشَّهَٰدَةِ عَلَىٰ وَجْهِهَآ أَوْ يَخَافُوٓا۟ أَن تُرَدَّ أَيْمَٰنٌۢ بَعْدَ أَيْمَٰنِهِمْ وَٱتَّقُوا۟ ٱللَّهَ وَٱسْمَعُوا۟ وَٱللَّهُ لَا يَهْدِى ٱلْقَوْمَ ٱلْفَٰسِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅது, சாட்சியத்தை அதற்குரிய முறையில் கொண்டு (அவர்கள்) வருவதற்கும் அல்லது அவர்களுடைய சத்தியங்களுக்குப் பின்னர் சத்தியங்கள் மறுக்கப்படும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் மிக்க சுலபமானதாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள், செவிசாயுங்கள். பாவிகளான கூட்டத்தை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Omar Sharifஅது (-இரு சாட்சிகளை தொழுகைக்குப் பிறகு சத்தியம் செய்ய வைப்பது) சாட்சியத்தை அதற்குரிய முறையில் அவர்கள் நிறைவேற்றுவதற்கும்; அல்லது, அவர்களுடைய சத்தியங்களுக்குப் பின்னர் சத்தியங்கள் மறுக்கப்படும் என்பதை அவர்கள் பயப்படுவதற்கும் மிக்க சுலபமானதாகும். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இன்னும், (மார்க்க சட்டங்களுக்கு) செவிசா(ய்த்து, கீழ்ப்படி)யுங்கள். பாவிகளான கூட்டத்தை அல்லாஹ் நேர்வழி செலுத்த மாட்டான்.
Tamil Translation - Abdulhamid Baqawi108. உள்ளதை உள்ளவாறு அவர்கள் சாட்சியம் கூறும்படி செய்வதற்கு இது மிக்க சுலபமான வழியாகும், அவர்கள் (பொய்) சத்தியம் செய்தாலும், மற்றவரின் சத்தியம் அதைத் தடுத்துவிடும் என்று அவர்கள் பயப்படுவதற்கும் இது மிக்க சுலபமான வழி. ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து (அவன் கட்டளைக்கே) நீங்கள் செவிசாயுங்கள். (இதற்கு மாறு செய்யும்) பாவிகளை அல்லாஹ் நேரான வழியில் செலுத்த மாட்டான்.