وَكَذَٰلِكَ أَوْحَيْنَآ إِلَيْكَ رُوحًا مِّنْ أَمْرِنَا مَا كُنتَ تَدْرِى مَا ٱلْكِتَٰبُ وَلَا ٱلْإِيمَٰنُ وَلَٰكِن جَعَلْنَٰهُ نُورًا نَّهْدِى بِهِۦ مَن نَّشَآءُ مِنْ عِبَادِنَا وَإِنَّكَ لَتَهْدِىٓ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவ்வாறு தான் நாம் நமது கட்டளையினால் (இந்த குர்ஆனை எல்லோருக்கும்) அருளாக உமக்கு வஹ்யி அறிவித்தோம். வேதம் என்றால் என்ன, ஈமான் என்றால் என்ன என்று நீர் அறிந்தவராக இருக்கவில்லை. எனினும், நாம் இதை ஓர் ஒளியாக ஆக்கினோம். இதன் மூலம் நமது அடியார்களில் நாம் நாடுகின்றவர்களுக்கு நாம் நேர்வழி காட்டுகின்றோம். நிச்சயமாக நீர் நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகின்றீர்.
Tamil Translation - Omar Sharifஇவ்வாறுதான், நாம் நமது கட்டளையினால் (நம்மிடமிருந்து இந்த குர்ஆனை எல்லோருக்கும்) அருளாக (இருக்கும்படி) உமக்கு வஹ்யி மூலம் அறிவித்தோம். வேதம் என்றால் என்ன, ஈமான் என்றால் என்ன என்று நீர் அறிந்திருக்கவில்லை. எனினும், நாம் இ(ந்த வேதத்)தை ஓர் ஒளியாக ஆக்கினோம். இதன் மூலம் நமது அடியார்களில் நாம் நாடுகிறவர்களுக்கு நாம் நேர்வழி காட்டுகிறோம். (நபியே!) நிச்சயமாக நீர் நேரான பாதையின் பக்கம் நேர்வழி காட்டுகிறீர்.
Tamil Translation - Abdulhamid Baqawi52. (நபியே!) இவ்வாறே உமக்கு நம் கட்டளையை வஹ்யின் மூலமாக அறிவிக்கிறோம். (இதற்கு முன்னர்) நீர் வேதம் இன்னதென்றும், நம்பிக்கை இன்னதென்றும் அறிந்தவராக இருக்கவில்லை. ஆயினும், (இந்த வேதத்தை உமக்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்து) அதை ஒளியாகவும் ஆக்கி, நம் அடியார்களில் நாம் விரும்பியவர்களுக்கு அதைக் கொண்டு நேரான வழியைக் காண்பிக்கிறோம். (நபியே!) நிச்சயமாக நீர் (அதன் மூலம் மக்களுக்கு) நேரான வழியைக் காண்பிக்கிறீர்.