وَمَا كَانَ لِبَشَرٍ أَن يُكَلِّمَهُ ٱللَّهُ إِلَّا وَحْيًا أَوْ مِن وَرَآئِ حِجَابٍ أَوْ يُرْسِلَ رَسُولًا فَيُوحِىَ بِإِذْنِهِۦ مَا يَشَآءُ إِنَّهُۥ عَلِىٌّ حَكِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஒரு மனிதருக்கு முடியாது -அவரிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசுவது, வஹ்யி - அறிவிப்பதன் மூலம், அல்லது திரைக்குப் பின்னால் இருந்து, அல்லது ஒரு தூதரை (அவரிடம்) அனுப்பி, தனது உத்தரவின் படி (அந்த தூதருக்கு) தான் நாடுவதை வஹ்யி - அறிவித்தாலே தவிர (அல்லாஹ் யாரிடமும் நேரடியாகப் பேசமாட்டான்). நிச்சயமாக அவன் மிக உயர்ந்தவன், மகா ஞானவான்.
Tamil Translation - Omar Sharifஒரு மனிதருக்கு - அவரிடம் அல்லாஹ் நேரடியாகப் பேசுவது தகுதியாகாது. என்றாலும், வஹ்யி - அறிவிப்பதன் மூலம் (அவரிடம் பேசுவான்); அல்லது, திரைக்குப் பின்னால் இருந்து (அவரிடம் பேசுவான்); அல்லது, ஒரு வானவ தூதரை (அவரிடம்) அனுப்பி, தனது உத்தரவின் படி (அந்த தூதருக்கு) தான் நாடுவதை வஹ்யி - அறிவித்து பேசுவான். (அப்படி இல்லாமல் அல்லாஹ் யாரிடமும் நேரடியாகப் பேசமாட்டான்). நிச்சயமாக அவன் மிக உயர்ந்தவன், மகா ஞானவான் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi51. அல்லாஹ் (நேருக்குநேர்) பேசுவதற்குரிய தகுதி மனிதரில் ஒருவருக்குமில்லை. எனினும், வஹ்யின் மூலமாகவோ அல்லது திரைக்கு அப்பால் இருந்தோ அல்லது வானவர்களை அனுப்பிவைத்து வஹியின் மூலமாகவோ தனக்கு விருப்பமான கட்டளையை (மனிதனுக்கு) அறிவிக்கிறான். (ஏனென்றால்) நிச்சயமாக அவன் மிக மேலானவனும் மிக ஞானமுடையவனுமாவான்.