caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 153

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:153

يَسْـَٔلُكَ أَهْلُ ٱلْكِتَٰبِ أَن تُنَزِّلَ عَلَيْهِمْ كِتَٰبًا مِّنَ ٱلسَّمَآءِ فَقَدْ سَأَلُوا۟ مُوسَىٰٓ أَكْبَرَ مِن ذَٰلِكَ فَقَالُوٓا۟ أَرِنَا ٱللَّهَ جَهْرَةً فَأَخَذَتْهُمُ ٱلصَّٰعِقَةُ بِظُلْمِهِمْ ثُمَّ ٱتَّخَذُوا۟ ٱلْعِجْلَ مِنۢ بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَٰتُ فَعَفَوْنَا عَن ذَٰلِكَ وَءَاتَيْنَا مُوسَىٰ سُلْطَٰنًا مُّبِينًا

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) வேதக்காரர்கள் வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை நீர் இறக்கும்படி உம்மிடம் கேட்கிறார்கள். திட்டமாக இதைவிட மிகப் பெரியதை மூஸாவிடம் (அவர்கள்) கேட்டனர். “அல்லாஹ்வை கண்கூடாக எங்களுக்குக் காண்பி” என்று கூறினர். ஆகவே, அவர்களின் அநியாயத்தினால் அவர்களை இடி முழக்கம் பிடித்தது. பிறகு, அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னர் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். அதை மன்னித்தோம். மூஸாவிற்கு தெளிவான சான்றையும் கொடுத்தோம்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) வேதக்காரர்கள், வானத்திலிருந்து ஒரு வேதத்தை அவர்கள் மீது நீர் இறக்கி தரும்படி உம்மிடம் கேட்கிறார்கள். ஆக, திட்டமாக இதைவிட மிகப் பெரிய (விஷயத்)தை மூஸாவிடம் அவர்கள் கேட்டனர். அதாவது, “அல்லாஹ்வை கண்கூடாக எங்களுக்குக் காண்பி!” என்று கூறினர். ஆகவே, அவர்களின் அநியாயத்தினால் அவர்களை இடி முழக்கம் பிடித்தது. பிறகு, தெளிவான அத்தாட்சிகள் அவர்களிடம் வந்ததன் பின்னர் காளைக் கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். ஆக, அதை(யும் நாம் அவர்களுக்கு) மன்னித்தோம். இன்னும், மூஸாவிற்கு தெளிவான சான்றையும் கொடுத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi153. (நபியே!) வேதத்தையுடையவர்கள் (அவர்கள் விரும்புகிறபடி) வானத்திலிருந்து அவர்கள் மீது ஒரு வேதத்தை இறக்கிவைக்குமாறு உம்மிடம் கேட்கின்றனர். நிச்சயமாக இதைவிடப் பெரியதொன்றையே மூஸாவிடம் அவர்கள் கேட்டு ‘‘அல்லாஹ்வை எங்களுக்குக் கண்கூடாகக் காண்பிப்பீராக'' என்று கூறினார்கள்.ஆகவே, அவர்களின் அநியாயத்தின் காரணமாக அவர்களை இடி முழக்கம் பிடித்துக்கொண்டது. (இதுமட்டுமா?) அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்ததன் பின்னரும் காளைக்கன்றை(த் தெய்வமாக) எடுத்துக் கொண்டனர். இதையும் நாம் மன்னித்து (அவர்களுடைய நபி) மூஸாவுக்கு தெளிவான அத்தாட்சியைக் கொடுத்தோம்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70