caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

An-Nisaa அத்தியாயம், வசனம் 154

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 92 · 4:154

وَرَفَعْنَا فَوْقَهُمُ ٱلطُّورَ بِمِيثَٰقِهِمْ وَقُلْنَا لَهُمُ ٱدْخُلُوا۟ ٱلْبَابَ سُجَّدًا وَقُلْنَا لَهُمْ لَا تَعْدُوا۟ فِى ٱلسَّبْتِ وَأَخَذْنَا مِنْهُم مِّيثَٰقًا غَلِيظًا

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுடைய வாக்குறுதியின் காரணமாக மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம். “வாசலில் தலைகுனிந்தவர்களாக நுழையுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம். “சனிக்கிழமையில் வரம்பு மீறாதீர்கள்” என்றும் அவர்களுக்குக் கூறினோம். அவர்களிடம் உறுதியான வாக்குறுதியை எடுத்தோம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (அவர்கள் அல்லாஹ்விற்கு கொடுத்த) அவர்களுடைய உறுதிமொழியின் காரணமாக (-(அதை முறித்த காரணத்தால்) மலையை அவர்களுக்கு மேல் உயர்த்தினோம். இன்னும், “(பைத்துல் முகத்தஸ் உடைய) வாசலில் தலைகுனிந்தவர்களாக நுழையுங்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம். இன்னும், “சனிக்கிழமையில் (மீன் பிடிக்கக் கூடாது என்ற) கட்டுப்பாட்டை மீறாதீர்கள்” என்று அவர்களுக்குக் கூறினோம். இன்னும், அவர்களிடம் உறுதியான உடன்படிக்கையை எடுத்தோம்.
Tamil Translation - Abdulhamid Baqawi154. அவர்களிடம் வாக்குறுதி வாங்குவதற்காகத் ‘தூர்' (ஸீனாய்) என்னும் மலையை அவர்கள் மீது உயர்த்திய சமயத்தில் ‘‘(இந்நகரத்தின்) வாயிலில் தலைகுனிந்து வணங்கியவர்களாகவே செல்லுங்கள்'' என்று நாம் அவர்களுக்கு கூறினோம். (மீன் வேட்டையாட) சனிக்கிழமையில் நீங்கள் வரம்பு மீறாதீர்கள் என்றும் அவர்களுக்குக் கூறி (இவற்றிற்காகவும்) உறுதியான வாக்குறுதியை நாம் அவர்களிடம் பெற்றிருந்தோம். (எனினும் அவர்கள் மாறிவிட்டனர்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70