وَقَالَ ٱلَّذِينَ كَفَرُوا۟ لَن نُّؤْمِنَ بِهَٰذَا ٱلْقُرْءَانِ وَلَا بِٱلَّذِى بَيْنَ يَدَيْهِ وَلَوْ تَرَىٰٓ إِذِ ٱلظَّٰلِمُونَ مَوْقُوفُونَ عِندَ رَبِّهِمْ يَرْجِعُ بَعْضُهُمْ إِلَىٰ بَعْضٍ ٱلْقَوْلَ يَقُولُ ٱلَّذِينَ ٱسْتُضْعِفُوا۟ لِلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ لَوْلَآ أَنتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிராகரிப்பவர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆனையும் இதற்கு முன்னுள்ளதையும் (-முந்திய வேதங்களையும்) நாங்கள் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்.” அநியாயக்காரர்கள் தங்கள் இறைவன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களில் சிலர் சிலரிடம் எதிர்த்து (பதில்) பேசுகின்ற சமயத்தை நீர் பார்த்தால்... (அக்காட்சி மிக மோசமாக இருக்கும்). பெருமை அடித்தவர்களுக்கு பலவீனர்கள் கூறுவார்கள், “நீங்கள் இல்லை என்றால் நாங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகியிருப்போம்.”
Tamil Translation - Omar Sharifநிராகரிப்பவர்கள் கூறினார்கள்: “இந்த குர்ஆனையும் இதற்கு முன்னுள்ள (வேதத்)தையும் நாங்கள் அறவே நம்பிக்கை கொள்ள மாட்டோம்.” இன்னும், அநியாயக்காரர்கள் தங்கள் இறைவன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டு அவர்களில் சிலர் சிலரிடம் எதிர்த்து (பதில்) பேசுகிற சமயத்தை (நபியே!) நீர் பார்த்தால் (அக்காட்சி மிக பயங்கரமாக இருக்கும்). பெருமை அடித்த (தலை)வர்களுக்கு (அவர்களை பின்பற்றிய) பலவீனர்கள் கூறுவார்கள், “நீங்கள் இல்லை என்றால் நாங்கள் நம்பிக்கையாளர்களாக ஆகியிருப்போம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi31. ‘‘ நிச்சயமாக நாங்கள் இந்த குர்ஆனையும் நம்பமாட்டோம்; இதற்கு முன்னுள்ள வேதங்களையும் நம்பவேமாட்டோம்'' என்று (இந்த) நிராகரிப்பவர்கள் கூறுகின்றனர். ஆகவே, இவ்வக்கிரமக்காரர்கள் தங்கள் இறைவன்முன் நிறுத்தப்பட்டு அவர்களில் சிலர் சிலரை நிந்திப்பதையும்; பலவீனமானவர்கள் கர்வம் கொண்டவர்களை நோக்கி ‘‘ நீங்கள் இல்லையெனில் நிச்சயமாக நாங்கள் நம்பிக்கை கொண்டேயிருப்போம்'' என்று கூறுவதையும் நீர் பார்ப்பீராயின் (அவர்களின் இழி நிலைமையைக் கண்டு கொள்வீர்).