قَالَ ٱلَّذِينَ ٱسْتَكْبَرُوا۟ لِلَّذِينَ ٱسْتُضْعِفُوٓا۟ أَنَحْنُ صَدَدْنَٰكُمْ عَنِ ٱلْهُدَىٰ بَعْدَ إِذْ جَآءَكُم بَلْ كُنتُم مُّجْرِمِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionபெருமை அடித்தவர்கள் (-தலைவர்கள்) பலவீனர்களுக்கு (-தங்களை பின்பற்றியவர்களுக்கு) கூறுவார்கள்: நேர்வழி உங்களிடம் வந்த பின்னர் (அந்த) நேர்வழியை விட்டும் நாங்களா உங்களை தடுத்தோம்? மாறாக, நீங்கள்தான் குற்றவாளிகளாக (பாவிகளாக) இருந்தீர்கள்.
Tamil Translation - Omar Sharifபெருமை அடித்த (தலை)வர்கள் (தங்களைப் பின்பற்றி வழிகெட்ட) பலவீனர்களுக்கு கூறுவார்கள்: “நேர்வழி உங்களிடம் வந்த பின்னர் (அந்த) நேர்வழியை விட்டும் நாங்களா உங்களைத் தடுத்தோம்? மாறாக, நீங்கள்தான் குற்றவாளிகளாக (பெரும் பாவிகளாக) இருந்தீர்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi32. அதற்கு (அவர்களில்) கர்வம் கொண்டிருந்தவர்கள் பலவீனமாக இருந்தவர்களை நோக்கி ‘‘உங்களிடம் நேரான வழி வந்ததன் பின்னர் (நீங்கள் அதில் செல்லாது) நாங்களா உங்களைத் தடுத்தோம்? (அவ்வாறு) இல்லை; நீங்கள்தான் (அதில் செல்லாது) குற்றவாளிகளாக ஆனீர்கள்'' என்று கூறுவார்கள்.