وَلِسُلَيْمَٰنَ ٱلرِّيحَ غُدُوُّهَا شَهْرٌ وَرَوَاحُهَا شَهْرٌ وَأَسَلْنَا لَهُۥ عَيْنَ ٱلْقِطْرِ وَمِنَ ٱلْجِنِّ مَن يَعْمَلُ بَيْنَ يَدَيْهِ بِإِذْنِ رَبِّهِۦ وَمَن يَزِغْ مِنْهُمْ عَنْ أَمْرِنَا نُذِقْهُ مِنْ عَذَابِ ٱلسَّعِيرِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஸுலைமானுக்கு காற்றையும் (கட்டுப்படுத்தி தந்தோம்). அதன் காலைப் பொழுதும் ஒரு மாதமாகும். அதன் மாலைப்பொழுதும் ஒரு மாதமாகும். அவருக்கு நாம் செம்பினுடைய சுரங்கத்தை (தண்ணீராக) ஓட வைத்தோம். அவருக்கு முன்னால் அவரது இறைவனின் உத்தரவின்படி ஜின்களிலிருந்து வேலை செய்கின்றவர்களையும் (அவருக்கு நாம் கட்டுப்படுத்தி கொடுத்தோம்). அவர்களில் யார் நமது கட்டளையை விட்டு விலகுவாரோ அவருக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பின் தண்டனையை நாம் சுவைக்க வைப்போம்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், சுலைமானுக்குக் காற்றையும் கட்டுப்படுத்தி தந்தோம். அதன் காலைப் பொழுதும் ஒரு மாதமாகும். அதன் மாலைப்பொழுதும் ஒரு மாதமாகும். அவருக்கு நாம் செம்புடைய சுரங்கத்தை (தண்ணீராக) ஓட வைத்தோம். அவருக்கு முன்னால் அவரது இறைவனின் உத்தரவின்படி வேலை செய்கிற ஜி̀ன்களையும் (அவருக்கு நாம் கட்டுப்படுத்திக் கொடுத்தோம்). அவர்களில் யார் நமது கட்டளையை விட்டு விலகுவாரோ அவருக்கு கொழுந்து விட்டெரியும் நெருப்பின் தண்டனையை நாம் சுவைக்க வைப்போம்.
Tamil Translation - Abdulhamid Baqawi12. மேலும், ஸுலைமானுக்கு காற்றை வசப்படுத்தித் தந்தோம். அதன் காலைப் பயணம் ஒரு மாத தூரமும், அதன் மாலைப் பயணம் ஒரு மாத தூரமுமாக இருந்தது. இன்னும், செம்பை ஊற்று (நீரை)ப் போல் நாம் அவருக்கு (உருகி) ஓடச்செய்தோம். தன் இறைவனுடைய கட்டளைப்படி அவருக்கு வேலை செய்யக்கூடிய ஜின்களையும் நாம் அவருக்கு வசப்படுத்திக் கொடுத்து (அவருக்கு கட்டுப்பட்டு நடப்பதில்) அவர்களில் எவன் நம் கட்டளையைப் புறக்கணிக்கிறானோ அவனை நரக வேதனையைச் சுவைக்கும் படி நாம் செய்வோம் (என்றோம்).