caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Saba அத்தியாயம், வசனம் 13

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 58 · 34:13

يَعْمَلُونَ لَهُۥ مَا يَشَآءُ مِن مَّحَٰرِيبَ وَتَمَٰثِيلَ وَجِفَانٍ كَٱلْجَوَابِ وَقُدُورٍ رَّاسِيَٰتٍ ٱعْمَلُوٓا۟ ءَالَ دَاوُۥدَ شُكْرًا وَقَلِيلٌ مِّنْ عِبَادِىَ ٱلشَّكُورُ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவை (-அந்த ஷைத்தான்கள்) அவருக்கு அவர் நாடுகின்ற தொழுமிடங்களையும் சிலைகளையும் நீர் தொட்டிகளைப் போன்ற பாத்திரங்களையும் உறுதியான சட்டிகளையும் செய்கின்றன. தாவூதின் குடும்பத்தார்களே! (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவதற்காக (நன்மைகளை) செய்யுங்கள். என் அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் குறைவானவர்களே.
Tamil Translation - Omar Sharifஅவை (-அந்த ஷைத்தான்கள்) அவருக்கு அவர் நாடுகிறபடி தொழுமிடங்களையும் சிலைகளையும் நீர் தொட்டிகளைப் போன்ற பெரிய பாத்திரங்களையும் உறுதியான சட்டிகளையும் செய்வார்கள். தாவூதின் குடும்பத்தார்களே! (அல்லாஹ்விற்கு) நன்றி செலுத்துவதற்காக (நன்மைகளை) செய்யுங்கள். என் அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் குறைவானவர்களே.
Tamil Translation - Abdulhamid Baqawi13. ஸுலைமான் விரும்பிய மாளிகைகளையும், சிலைகளையும், (பெரிய பெரிய) தண்ணீர்த் தொட்டிகளைப் போன்ற பெரும் கொப்பரைகளையும், அசைக்க முடியாத பெரிய (பெரிய) ‘தேகு' (சமையல் பாத்திரங்)களையும் அவை செய்து கொண்டிருந்தன. (அவருடைய குடும்பத்தினரை நோக்கி) ‘‘தாவூதுடைய சந்ததிகளே ! இவற்றுக்காக நீங்கள் (நமக்கு) நன்றி செலுத்திக் கொண்டிருங்கள்'' (என்று கட்டளையிட்டோம்). எனினும், என் அடியார்களில் நன்றி செலுத்துபவர்கள் வெகு சொற்பமே ஆவார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70