أَنِ ٱعْمَلْ سَٰبِغَٰتٍ وَقَدِّرْ فِى ٱلسَّرْدِ وَٱعْمَلُوا۟ صَٰلِحًا إِنِّى بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉருக்குச் சட்டைகள் செய்வீராக! (சட்டைகளில் உள்ள துவாரங்களுக்கு ஏற்ப) ஆணிகளை அளவாக செய்வீராக! (தாவூதே! தாவூதின் குடும்பத்தாரே!) நன்மையை செய்யுங்கள்! நிச்சயமாக நான் நீங்கள் செய்வதை உற்று நோக்குகின்றேன்.
Tamil Translation - Omar Sharifஉருக்குச் சட்டைகள் செய்வீராக! இன்னும், (சட்டைகளில் உள்ள துவாரங்களுக்கு ஏற்ப) ஆணிகளை அளவாக செய்வீராக! (தாவூதே! தாவூதின் குடும்பத்தாரே!) நன்மையை செய்யுங்கள்! நிச்சயமாக நான் நீங்கள் செய்வதை உற்று நோக்குகிறேன்.
Tamil Translation - Abdulhamid Baqawi11. மேலும், (சங்கிலி) வளையங்களை செய்து (அவற்றை முறைப்படி) ஒழுங்காக இணைத்து போர்ச்சட்டை செய்யவும் (என்று கட்டளையிட்டதுடன் அவரையும் அவரைச் சார்ந்தவர்களையும் நோக்கி) ‘‘நீங்கள் நற்செயல்களையே செய்து கொண்டிருங்கள்; நிச்சயமாக நான், நீங்கள் செய்பவற்றை உற்று நோக்குபவன்'' (என்றோம்).