caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 9

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:9

أَوَلَمْ يَسِيرُوا۟ فِى ٱلْأَرْضِ فَيَنظُرُوا۟ كَيْفَ كَانَ عَٰقِبَةُ ٱلَّذِينَ مِن قَبْلِهِمْ كَانُوٓا۟ أَشَدَّ مِنْهُمْ قُوَّةً وَأَثَارُوا۟ ٱلْأَرْضَ وَعَمَرُوهَآ أَكْثَرَ مِمَّا عَمَرُوهَا وَجَآءَتْهُمْ رُسُلُهُم بِٱلْبَيِّنَٰتِ فَمَا كَانَ ٱللَّهُ لِيَظْلِمَهُمْ وَلَٰكِن كَانُوٓا۟ أَنفُسَهُمْ يَظْلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇவர்கள் பூமியில் பயணிக்க வேண்டாமா? தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்ப்பார்களே. இவர்களை விட பலத்தால் அவர்கள் கடுமையானவர்களாக இருந்தார்கள். பூமியை உழுதார்கள். இன்னும், இவர்கள் அதை செழிப்பாக்கியதைவிட அதிகமாக அவர்கள் அதை செழிப்பாக்கினார்கள். இன்னும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளுடன் அவர்களுடைய தூதர்கள் வந்தனர். அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இல்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Omar Sharifஇவர்கள் பூமியில் பயணிக்க வேண்டாமா? தங்களுக்கு முன்னுள்ளவர்களின் முடிவு எப்படி இருந்தது என்று இவர்கள் பார்ப்பார்களே! இவர்களை விட ஆற்றலால் அவர்கள் கடுமையானவர்களாக இருந்தார்கள். இன்னும், அவர்கள் பூமியை உழுதார்கள். இன்னும், இவர்கள் அதை செழிப்பாக்கியதைவிட அதிகமாக அவர்கள் அதை செழிப்பாக்கினார்கள். இன்னும், அவர்களுடைய இறைத் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். ஆக, அல்லாஹ் அவர்களுக்கு அநியாயம் செய்பவனாக இருக்கவில்லை. எனினும், அவர்கள் தங்களுக்குத் தாங்களே அநியாயம் செய்பவர்களாக இருந்தனர்.
Tamil Translation - Abdulhamid Baqawi9. இவர்கள் பூமியில் சுற்றித்திரிய வேண்டாமா? அவ்வாறாயின், இவர்களுக்கு முன்னிருந்த (நிராகரிப்ப)வர்களின் முடிவு எவ்வாறாயிற்று என்பதைக் கண்டு கொள்வார்கள். (முன்னிருந்த) அவர்கள் இவர்களைவிட பலசாலிகளாகவும், இவர்கள் எவ்வளவு பூமியை அபிவிருத்தி செய்தார்களோ அதைவிட அதிகமாக பூமிகளைப் பண்படுத்தி அபிவிருத்தி செய்தவர்களாகவும் இருந்தார்கள். (இந்நிலைமையில்) அவர்களிடம் அவர்களுக்கு அனுப்பப்பட்ட தூதர்கள் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கிழைக்கவில்லை. எனினும், அவர்கள் (அந்நபிமார்களைப் பொய்யாக்கித்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70