caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Ar-Room அத்தியாயம், வசனம் 8

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 84 · 30:8

أَوَلَمْ يَتَفَكَّرُوا۟ فِىٓ أَنفُسِهِم مَّا خَلَقَ ٱللَّهُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضَ وَمَا بَيْنَهُمَآ إِلَّا بِٱلْحَقِّ وَأَجَلٍ مُّسَمًّى وَإِنَّ كَثِيرًا مِّنَ ٱلنَّاسِ بِلِقَآئِ رَبِّهِمْ لَكَٰفِرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் தங்களைத் தாமே சிந்தித்து பார்க்க மாட்டார்களா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் அந்த இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றையும் உண்மையான காரியத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர படைக்கவில்லை. நிச்சயமாக மக்களில் அதிகமானவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள்தான்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் தங்களைத் தாமே சிந்தித்து பார்க்க மாட்டார்களா? அல்லாஹ் வானங்களையும் பூமியையும் இன்னும் அந்த இரண்டிற்கு மத்தியில் உள்ளவற்றையும் உண்மையான காரியத்திற்காகவும் ஒரு குறிப்பிட்ட தவணைக்காகவும் தவிர படைக்கவில்லை. நிச்சயமாக மக்களில் அதிகமானவர்கள் தங்கள் இறைவனின் சந்திப்பை நிராகரிப்பவர்கள்தான்.
Tamil Translation - Abdulhamid Baqawi8. (இதை) அவர்கள் தங்களுக்குள்ளாகவே கவனிக்க வேண்டாமா? வானங்களையும். பூமியையும், இவற்றுக்கு மத்தியில் உள்ளவற்றையும் நியாயமான காரணமின்றியும், குறிப்பிட்ட தவணையின்றியும் அல்லாஹ் படைக்கவில்லை. எனினும், மனிதரில் பெரும்பாலானவர்கள் தங்கள் இறைவனைச் சந்திப்பதையும் நிராகரிக்கின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70