caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 81

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:81

وَإِذْ أَخَذَ ٱللَّهُ مِيثَٰقَ ٱلنَّبِيِّـۧنَ لَمَآ ءَاتَيْتُكُم مِّن كِتَٰبٍ وَحِكْمَةٍ ثُمَّ جَآءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِۦ وَلَتَنصُرُنَّهُۥ قَالَ ءَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَىٰ ذَٰلِكُمْ إِصْرِى قَالُوٓا۟ أَقْرَرْنَا قَالَ فَٱشْهَدُوا۟ وَأَنَا۠ مَعَكُم مِّنَ ٱلشَّٰهِدِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅல்லாஹ் நபிமார்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூறுவீராக! (அவர்களை நோக்கி) "வேதத்தையும், ஞானத்தையும் (நான்) உங்களுக்குக் கொடுத்தபோதெல்லாம் பிறகு உங்களுடனுள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை (நீங்கள்) நிச்சயமாக நம்பிக்கை கொள்ள வேண்டும்; நிச்சயமாக அவருக்கு உதவவேண்டும். (இதனை) ஒப்புக் கொண்டீர்களா? இதன் மீது என் உடன்படிக்கையை ஏற்றீர்களா?" என்று கூறினான். அவர்கள் "(அதை) ஒப்புக் கொண்டோம்" எனக் கூறினார்கள். "ஆகவே, (இதற்கு நீங்களும்) சாட்சி பகருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் இருக்கிறேன்" என்று (அல்லாஹ்) கூறினான்.
Tamil Translation - Omar Sharifஅல்லாஹ் நபிமார்களின் வாக்குறுதியை வாங்கிய சமயத்தை நினைவு கூர்வீராக! (அவர்களை நோக்கி) “வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்கு எப்போது கொடுத்தாலும், (அதற்கு) பிறகு, உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு (இறுதி) தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் நிச்சயமாக நம்பிக்கை கொள்ள வேண்டும்; இன்னும், நிச்சயமாக அவருக்கு நீங்கள் உதவவேண்டும். (இதனை) நீங்கள் ஏற்கிறீர்களா? இதன் மீது என் உறுதியான உடன்படிக்கையை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?’’ என்று அல்லாஹ் (அந்த தூதர்களிடம்) கூறினான். அவர்கள், “நாங்கள் (அதை) ஏற்கிறோம்” எனக் கூறினார்கள். “ஆகவே, (இதற்கு) நீங்களும் சாட்சி பகருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாளர்களில் இருக்கிறேன்’’ என்று அல்லாஹ் கூறினான்.
Tamil Translation - Abdulhamid Baqawi81. நபிமார்களிடம் அல்லாஹ் வாக்குறுதி வாங்கிய சமயத்தில் (அவர்களை நோக்கி) ‘‘வேதத்தையும், ஞானத்தையும் நான் உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன். இதற்குப் பின்னர் உங்களிடம் உள்ளதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவரை நீங்கள் உண்மையாக நம்பிக்கை கொண்டு நிச்சயமாக அவருக்கு உதவி செய்யவேண்டும்'' (என்று கூறி) ‘‘இதை நீங்கள் உறுதிப்படுத்தினீர்களா? என் இக்கட்டளையை எடுத்துக் கொண்டீர்களா?'' என்று கேட்டதற்கு, அவர்கள் ‘‘நாங்கள் (அதை) அங்கீகரித்துக் கொண்டோம்'' என்றே கூறினார்கள். அப்போது (இறைவன் ‘‘இதற்கு) நீங்கள் சாட்சியாயிருங்கள். நானும் உங்களுடன் சாட்சியாக இருக்கிறேன்'' என்று கூறினான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70