caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 80

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:80

وَلَا يَأْمُرَكُمْ أَن تَتَّخِذُوا۟ ٱلْمَلَٰٓئِكَةَ وَٱلنَّبِيِّـۧنَ أَرْبَابًا أَيَأْمُرُكُم بِٱلْكُفْرِ بَعْدَ إِذْ أَنتُم مُّسْلِمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் "மலக்குகளையும், நபிமார்களையும் கடவுள்களாக (நீங்கள்) எடுத்துக் கொள்வதற்கும்" அவர் உங்களை ஏவுவது (அவருக்கு உசிதம்) இல்லை. நீங்கள் முஸ்லிம்களாக ஆகிய பின்னர் (அல்லாஹ்வை) நிராகரிக்கும்படி உங்களை ஏவுவாரா?
Tamil Translation - Omar Sharifஇன்னும், “மலக்குகளையும், நபிமார்களையும் வணங்கப்படும் தெய்வங்களாக (நீங்கள்) எடுத்துக் கொள்ளுங்கள்” என்று (அவர்) உங்களை ஏவுவதற்கும் அவருக்கு உரிமை இல்லை. நீங்கள் முஸ்லிம்களாக ஆகிய பின்னர் நிராகரிப்பை அவர் உங்களுக்கு ஏவுவாரா?
Tamil Translation - Abdulhamid Baqawi80. தவிர ‘‘வானவர்களையும், நபிமார்களையும் தெய்வங்களாக எடுத்துக் கொள்ளுங்கள்'' என்றும் அவர் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார் என்னே! இறைவன் ஒருவனையே நீங்கள் அங்கீகரித்த பின்னர் (அவனை) நிராகரிக்கும்படி அவர் உங்களை ஏவுவாரா?
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70