caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 78

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:78

وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُۥنَ أَلْسِنَتَهُم بِٱلْكِتَٰبِ لِتَحْسَبُوهُ مِنَ ٱلْكِتَٰبِ وَمَا هُوَ مِنَ ٱلْكِتَٰبِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِندِ ٱللَّهِ وَمَا هُوَ مِنْ عِندِ ٱللَّهِ وَيَقُولُونَ عَلَى ٱللَّهِ ٱلْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் வேதத்(தை ஓதுவ)தில் தங்கள் நாவைக் கோணுகின்றனர், வேதத்திலுள்ளதுதான் என (நீங்கள்) அதை எண்ணுவதற்காக. அது வேதத்தில் உள்ளதல்ல. "அது அல்லாஹ்விடமிருந்து உள்ளது" எனக் கூறுகின்றனர். அது அல்லாஹ்விடமிருந்து உள்ளதல்ல. அவர்கள் அறிந்து கொண்டே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகின்றனர்.
Tamil Translation - Omar Sharifஇன்னும் நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் வேதத்(தை ஓதுவ)தில் தங்கள் நாவைக் கோணுகிறார்கள், வேதத்திலுள்ளதுதான் என (நீங்கள்) அதை எண்ணுவதற்காக. ஆனால், அது வேதத்தில் உள்ளதல்ல. இன்னும், “அது அல்லாஹ்விடமிருந்து வந்தது’’ எனக் கூறுகிறார்கள். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் அறிந்தே அல்லாஹ்வின் மீது பொய் கூறுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi78. நிச்சயமாக அவர்களில் ஒரு பிரிவினர் இருக்கின்றனர். (அவர்கள்)வேதத்தை ஓதும்போது (அத்துடன் பல வாக்கியங்களைக் கலந்து, அதுவும்) வேதத்திலுள்ளதுதான் என நீங்கள் எண்ணிக் கொள்வதற்காக தங்கள் நாவைக் கோணி உளறுகின்றனர். எனினும் அது வேதத்திலுள்ளது அல்ல. இன்னும், ‘‘அது அல்லாஹ்விடமிருந்து வந்தது'' என்றும் அவர்கள் கூறுகின்றனர். ஆனால், அது அல்லாஹ்விடமிருந்து வந்ததல்ல. அவர்கள் நன்கறிந்துகொண்டே அல்லாஹ்வின் மீது இப்படி பொய் கூறுகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70