caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 77

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:77

إِنَّ ٱلَّذِينَ يَشْتَرُونَ بِعَهْدِ ٱللَّهِ وَأَيْمَٰنِهِمْ ثَمَنًا قَلِيلًا أُو۟لَٰٓئِكَ لَا خَلَٰقَ لَهُمْ فِى ٱلْـَٔاخِرَةِ وَلَا يُكَلِّمُهُمُ ٱللَّهُ وَلَا يَنظُرُ إِلَيْهِمْ يَوْمَ ٱلْقِيَٰمَةِ وَلَا يُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய வாக்குறுதிக்கும் தங்கள் சத்தியங்களுக்கும் பகரமாக சொற்ப விலையை வாங்குகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் அறவே (நற்)பாக்கியமில்லை. அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; அவர்கள் பக்கம் பார்க்க மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வுடைய உடன்படிக்கைக்கு பதிலாகவும் தங்கள் சத்தியங்களுக்கு பதிலாக சொற்ப கிரயத்தை வாங்குகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் அறவே (நற்)பாக்கியமில்லை. இன்னும், அல்லாஹ் அவர்களுடன் பேச மாட்டான்; இன்னும், அவர்கள் பக்கம் பார்க்க மாட்டான்; இன்னும், அவர்களைத் தூய்மைப்படுத்த மாட்டான். இன்னும், துன்புறுத்தும் தண்டனை அவர்களுக்கு உண்டு.
Tamil Translation - Abdulhamid Baqawi77. எவர்கள் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தங்கள் சத்தியங்களையும் சொற்பவிலைக்கு விற்றுவிடுகிறார்களோ அவர்களுக்கு மறுமையில் நிச்சயமாக ஒரு (நற்)பாக்கியமுமில்லை. மேலும், அல்லாஹ் (மறுமையில்) அவர்களுடன் (விரும்பிப்) பேசவுமாட்டான்; (அன்புடன்) அவர்களை இறுதி நாளில் திரும்பிப்பார்க்கவும் மாட்டான்; அவர்களைப் புனிதப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70