caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 79

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:79

مَا كَانَ لِبَشَرٍ أَن يُؤْتِيَهُ ٱللَّهُ ٱلْكِتَٰبَ وَٱلْحُكْمَ وَٱلنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا۟ عِبَادًا لِّى مِن دُونِ ٱللَّهِ وَلَٰكِن كُونُوا۟ رَبَّٰنِيِّـۧنَ بِمَا كُنتُمْ تُعَلِّمُونَ ٱلْكِتَٰبَ وَبِمَا كُنتُمْ تَدْرُسُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் ஒரு மனிதருக்கு கொடுக்க, பிறகு மக்களை நோக்கி, "அல்லாஹ்வைத் தவிர்த்து என் அடியார்களாக ஆகிவிடுங்கள்" என்று கூறுவது அவருக்கு உசிதமல்ல. என்றாலும் (மக்களை நோக்கி), "வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்பிப்பவர்களாக நீங்கள் இருப்பதாலும், (அதை) நீங்கள் கற்றுக் கொள்பவராக இருப்பதாலும் மக்களை சீர்திருத்தம் செய்யும் இறையச்சமுள்ள நிர்வாகிகளாக ஆகிவிடுங்கள்" (என்றுதான் கூறுவார்).
Tamil Translation - Omar Sharifவேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் ஒரு மனிதருக்கு கொடுக்க, பிறகு அவர் மக்களை நோக்கி, “அல்லாஹ்வைத் தவிர்த்து என்னை வணங்குபவர்களாக நீங்கள் ஆகிவிடுங்கள்’’ என்று கூறுவதற்கு அவருக்கு அறவே உரிமையில்லை. என்றாலும், (மக்களை நோக்கி கூறியதாவது), “வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்பிப்பவர்களாக நீங்கள் இருப்பதாலும், (அதை) நீங்கள் கற்பவர்களாக இருப்பதாலும் மக்களை சீர்திருத்தம் செய்கின்ற இறையச்சமுள்ள பொறுப்பாளர்களாக (நல்ல வழிகாட்டிகளாக) ஆகிவிடுங்கள்!’’
Tamil Translation - Abdulhamid Baqawi79. ஒரு மனிதருக்கு, வேதத்தையும், ஞானத்தையும், நபித்துவத்தையும் அல்லாஹ் கொடுத்த பின்னர் அவர் மனிதர்களை நோக்கி ‘‘அல்லாஹ்வை அன்றி என்னை வணங்குங்கள்'' என்று கூறமாட்டார். ஆயினும் (மனிதர்களை நோக்கி) ‘‘நீங்கள் வேதத்தை (மற்றவர்களுக்குக்) கற்றுக் கொடுத்துக் கொண்டும், ஓதிக்கொண்டும் இருப்பதன் காரணமாக, (அதில் உள்ளவாறு) இறைவன் ஒருவனையே வணங்கும் இறையச்சமுடைய நல்லவர்களாக ஆகிவிடுங்கள்'' என்றுதான் கூறுவார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70