وَلَا تُؤْمِنُوٓا۟ إِلَّا لِمَن تَبِعَ دِينَكُمْ قُلْ إِنَّ ٱلْهُدَىٰ هُدَى ٱللَّهِ أَن يُؤْتَىٰٓ أَحَدٌ مِّثْلَ مَآ أُوتِيتُمْ أَوْ يُحَآجُّوكُمْ عِندَ رَبِّكُمْ قُلْ إِنَّ ٱلْفَضْلَ بِيَدِ ٱللَّهِ يُؤْتِيهِ مَن يَشَآءُ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇன்னும் உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவரைத் தவிர (ஒரு முஸ்லிமை நம்பாதீர்கள்), நீங்கள் கொடுக்கப்பட்டது போன்று ஒருவர் கொடுக்கப்படுவார் என்றோ அல்லது (முஸ்லிம்கள்) உங்கள் இறைவனிடம் உங்களோடு தர்க்கிப்பார்கள் என்றோ நம்பாதீர்கள் (என்று கூறினர்). (நபியே!) கூறுவீராக: "நிச்சயமாக நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்." (நபியே!) கூறுவீராக: "நிச்சயமாக அருள் அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. (அவன்) நாடியவருக்கு அதைக் கொடுக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், மிக அறிந்தவன்."
Tamil Translation - Omar Sharifஇன்னும், (அவர்கள் கூறினார்கள்:) “உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவரைத் தவிர (முஸ்லிம்களை) நம்பாதீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்டது போன்று (ஒரு வேதம் வேறு) ஒருவருக்கு கொடுக்கப்படும் என்றோ அல்லது (முஸ்லிம்கள் மறுமையில்) உங்கள் இறைவனுக்கு முன்னர் உங்களோடு தர்க்கிப்பார்கள் என்றோ நம்பாதீர்கள்.’’ (இவ்வாறு அவர்கள் கூறினார்கள்). (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக நேர்வழி என்பது அல்லாஹ்வின் நேர்வழிதான்.” (நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக அருள் அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. (அவன்) நாடியவருக்கு அதைக் கொடுக்கிறான். அல்லாஹ் விசாலமானவன், நன்கறிந்தவன் ஆவான்.’’
Tamil Translation - Abdulhamid Baqawi73. ‘‘உங்கள் மார்க்கத்தைப் பின்பற்றியவர்களைத் தவிர (மற்றெவரையும்) நீங்கள் நம்பாதீர்கள்'' (என்றும் கூறுகின்றனர்). இதற்கு (நபியே!) கூறுவீராக: ‘‘உண்மையான நேர்வழி அல்லாஹ்வின் நேர்வழிதான்.'' (மேலும், அவர்கள் தங்கள் இனத்தாரை நோக்கி) ‘‘உங்களுக்குக் கொடுக்கப்பட்டது போன்று (ஒரு வேதம்) மற்றெவருக்கும் கொடுக்கப்படும் என்பதையோ அல்லது அந்த நம்பிக்கையாளர்கள் உங்கள் இறைவன் முன்பாக தர்க்கித்து உங்களை வெற்றி கொள்வார்கள் என்பதையோ நம்பாதீர்கள்!'' (என்றும் கூறுகின்றனர். அதற்கு நபியே!) கூறுவீராக: ‘‘(வேதம் என்னும்) பெரும்பாக்கியம் நிச்சயமாக அல்லாஹ்வின் கையில்தான் இருக்கிறது. அதை அவன் விரும்பியவர்களுக்கே கொடுக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (மனிதர்களின் தகுதியை) நன்கறிந்தவன் ஆவான்.