وَقَالَت طَّآئِفَةٌ مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ ءَامِنُوا۟ بِٱلَّذِىٓ أُنزِلَ عَلَى ٱلَّذِينَ ءَامَنُوا۟ وَجْهَ ٱلنَّهَارِ وَٱكْفُرُوٓا۟ ءَاخِرَهُۥ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionவேதக்காரர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறினர்: நீங்கள் நம்பிக்கையாளர்களுக்கு இறக்கப்பட்டதை பகலின் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்; அதன் இறுதியில் (அதை) நிராகரியுங்கள், அவர்கள் (தங்கள் நம்பிக்கையிலிருந்து) திரும்புவதற்காக (இவ்வாறு செய்யுங்கள்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், வேதக்காரர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்களில் சிலரை நோக்கிக்) கூறினர்: “நீங்கள் நம்பிக்கையாளர்களுக்கு இறக்கப்பட்டதை பகலின் ஆரம்பத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள்; அவர்கள் (தங்கள் நம்பிக்கையிலிருந்து) திரும்புவதற்காக அதன் இறுதியில் (அதை) நிராகரித்து விடுங்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi72. வேதத்தையுடையவர்களில் ஒரு கூட்டத்தினர் (தங்கள் இனத்தாரை நோக்கிக்) கூறுகின்றனர்: ‘‘நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களுக்கு அருளப்பட்ட (இவ் வேதத்)தைக் காலையில் நம்பிக்கை கொண்டு மாலையில் (அதை) நிராகரித்து விடுங்கள். (இதனால் நம்பிக்கைகொண்ட) அவர்களும் (குழப்பமடைந்து தங்கள் நம்பிக்கையிலிருந்து) விலகி விடக்கூடும்'' (என்றும்)