وَرَسُولًا إِلَىٰ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ أَنِّى قَدْ جِئْتُكُم بِـَٔايَةٍ مِّن رَّبِّكُمْ أَنِّىٓ أَخْلُقُ لَكُم مِّنَ ٱلطِّينِ كَهَيْـَٔةِ ٱلطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًۢا بِإِذْنِ ٱللَّهِ وَأُبْرِئُ ٱلْأَكْمَهَ وَٱلْأَبْرَصَ وَأُحْىِ ٱلْمَوْتَىٰ بِإِذْنِ ٱللَّهِ وَأُنَبِّئُكُم بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِى بُيُوتِكُمْ إِنَّ فِى ذَٰلِكَ لَـَٔايَةً لَّكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (ஆக்குவான்). (ஈஸா தூதரான பிறகு,) நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையின் அமைப்பைப்போல் படைத்து, அதில் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அது பறவையாக ஆகிவிடும். பிறவிக் குருடரையும் வெண் குஷ்டரையும் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமிப்பதையும் உங்களுக்கு அறிவிப்பேன். நிச்சயமாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி திட்டமாக இருக்கிறது (என்று கூறினார்).
Tamil Translation - Omar Sharifஇன்னும், இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் (ஆக்குவான்). (ஈஸா தூதரான பிறகு,) “நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு ஓர் அத்தாட்சியைக் கொண்டு வந்திருக்கிறேன். நிச்சயமாக நான் உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையின் உருவ அமைப்பைப்போல் படைத்து, அதில் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியினால் அது பறவையாக ஆகிவிடும். இன்னும், பிறவிக் குருடரையும் வெண் குஷ்டரையும் குணப்படுத்துவேன். இன்னும், மரணித்தோரையும் அல்லாஹ்வின் அனுமதியினால் உயிர்ப்பிப்பேன். இன்னும், நீங்கள் (அடுத்த வேளை) என்ன (உணவை) புசிப்பீர்கள் என்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் என்ன சேமித்து வைக்கிறீர்கள் என்பதையும் உங்களுக்கு அறிவிப்பேன். நிச்சயமாக நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு ஓர் அத்தாட்சி திட்டமாக இருக்கிறது” (என்று அவர் கூறினார்).
Tamil Translation - Abdulhamid Baqawi49. இஸ்ராயீலின் சந்ததிகளுக்கு (அவரை) ஒரு தூதராகவும் ஆக்குவான் (என்றும் இறைவன் கூறினான். பின்னர், ஈஸா பிறந்து தன் வாலிபத்தை அடைந்து இஸ்ராயீலின் சந்ததிகளிடம் சென்றபொழுது அவர்களை நோக்கிக் கூறியதாவது:) ‘‘நிச்சயமாக நான் உங்கள் இறைவனிடமிருந்து (அனுப்பப்பட்ட ஒரு தூதர். அதற்காக) உங்களுக்கு ஓர் அத்தாட்சி கொண்டு வந்திருக்கிறேன். உங்களுக்காக களிமண்ணிலிருந்து பறவையைப் போல் செய்து அதில் நான் ஊதுவேன். அல்லாஹ்வின் அனுமதியைக் கொண்டு அது (பறக்கும்) பறவையாக ஆகிவிடும். பிறவிக் குருடனையும் வெண் குஷ்டரோகியையும் நான் குணப்படுத்துவேன். அல்லாஹ்வின் அனுமதி கொண்டு மரணித்தோரையும் நான் உயிர்ப்பிப்பேன். நீங்கள் புசித்தவற்றையும், உங்கள் வீட்டில் நீங்கள் சேகரித்து வைத்திருப்பவற்றையும் நான் உங்களுக்கு அறிவிப்பேன். மெய்யாகவே நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் இதில் உங்களுக்கு (திருப்தி அளிக்கக்கூடிய) ஓர் அத்தாட்சி இருக்கிறது (என்றும்,)