وَمُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَىَّ مِنَ ٱلتَّوْرَىٰةِ وَلِأُحِلَّ لَكُم بَعْضَ ٱلَّذِى حُرِّمَ عَلَيْكُمْ وَجِئْتُكُم بِـَٔايَةٍ مِّن رَّبِّكُمْ فَٱتَّقُوا۟ ٱللَّهَ وَأَطِيعُونِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஎனக்கு முன் உள்ள தவ்றாத்தை (நான்) உண்மைப்படுத்துபவராகவும் உங்கள் மீது தடுக்கப்பட்டதில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்குவதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்). இன்னும், உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய)ஓர் அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள்; எனக்கு கீழ்ப்படியுங்கள்.
Tamil Translation - Omar Sharif(ஈஸா தொடர்ந்து கூறியதாவது:) “இன்னும், எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை (நான்) உண்மைப்படுத்துபவராக (இருப்பேன்). இன்னும், உங்கள் மீது தடுக்கப்பட்டதில் சிலவற்றை உங்களுக்கு நான் ஆகுமாக்குவதற்காகவும் (அனுப்பப்பட்டுள்ளேன்). இன்னும், உங்கள் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியுடன் உங்களிடம் வந்திருக்கிறேன். ஆகவே, அல்லாஹ்வை அஞ்சுங்கள். இன்னும் எனக்கு கீழ்ப்படியுங்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi50. என் முன்னால் உள்ள தவ்றாத்தை(யும்) நான் உண்மையாக்கி வைத்து (முன்னர்) உங்களுக்கு விலக்கப்பட்டவற்றில் சிலவற்றை உங்களுக்கு ஆகுமாக்கி வைப்பதற் காகவும் உங்கள் இறைவனிடமிருந்து (இத்தகைய) அத்தாட்சியை உங்களிடம் கொண்டு வந்திருக்கிறேன். ஆகவே, நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து என்னைப் பின்பற்றுங்கள்.