caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 36

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:36

فَلَمَّا وَضَعَتْهَا قَالَتْ رَبِّ إِنِّى وَضَعْتُهَآ أُنثَىٰ وَٱللَّهُ أَعْلَمُ بِمَا وَضَعَتْ وَلَيْسَ ٱلذَّكَرُ كَٱلْأُنثَىٰ وَإِنِّى سَمَّيْتُهَا مَرْيَمَ وَإِنِّىٓ أُعِيذُهَا بِكَ وَذُرِّيَّتَهَا مِنَ ٱلشَّيْطَٰنِ ٱلرَّجِيمِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(இம்ரானுடைய மனைவி) அவளைப் பெற்றெடுத்தபோது "என் இறைவா! நிச்சயமாக நான் அவளைப் பெண்ணாக பெற்றெடுத்தேன். -அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் மிகஅறிந்தவன். பெண்ணைப் போன்று ஆண் இல்லை. - நிச்சயமாக நான் அவளுக்கு ‘மர்யம்' எனப் பெயரிட்டேன். நிச்சயமாக நான் அவளையும், அவளுடைய சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து உன்னைக்கொண்டு பாதுகாக்கிறேன்!" எனக் கூறினாள்.
Tamil Translation - Omar Sharifஆக, (இம்ரானுடைய மனைவி) அவளைப் பெற்றெடுத்தபோது, “என் இறைவா! நிச்சயமாக நான் அவளைப் பெண்ணாக பெற்றெடுத்தேன். - அவள் பெற்றெடுத்ததை அல்லாஹ் மிக அறிந்தவன். (இந்த) பெண்ணைப் போன்று (அந்த) ஆண் இல்லை. - நிச்சயமாக நான் அவளுக்கு ‘மர்யம்’ எனப் பெயரிட்டேன். அவளையும், அவளுடைய சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானிடமிருந்து நீ பாதுகாக்க வேண்டுமென நிச்சயமாக நான் உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!’’ எனக் கூறினாள்.
Tamil Translation - Abdulhamid Baqawi36. அவர் (தன் விருப்பத்திற்கு மாறாக) ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தபோது ‘‘என் இறைவனே! நான் ஒரு பெண்ணையே பெற்றேன்'' என்று கூறினார். ஆயினும் (அவர் விரும்பிய) ஆண், இந்தப் பெண்ணைப் போன்றல்ல என்பதை அல்லாஹ்(தான்) நன்கறிவான். (பிறகு இம்ரானின் மனைவி) நிச்சயமாக நான் அதற்கு ‘மர்யம்' எனப் பெயரிட்டேன். அதையும், அதன் சந்ததியையும் விரட்டப்பட்ட ஷைத்தானி(ன் வஞ்சனைகளி)லிருந்து நீ காப்பாற்ற உன்னிடம் பிரார்த்திக்கிறேன்!'' (என்றார்.)
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70