فَتَقَبَّلَهَا رَبُّهَا بِقَبُولٍ حَسَنٍ وَأَنۢبَتَهَا نَبَاتًا حَسَنًا وَكَفَّلَهَا زَكَرِيَّا كُلَّمَا دَخَلَ عَلَيْهَا زَكَرِيَّا ٱلْمِحْرَابَ وَجَدَ عِندَهَا رِزْقًا قَالَ يَٰمَرْيَمُ أَنَّىٰ لَكِ هَٰذَا قَالَتْ هُوَ مِنْ عِندِ ٱللَّهِ إِنَّ ٱللَّهَ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவளுடைய இறைவன் அழகிய ஏற்பாக அவளை ஏற்றான். அழகிய வளர்ப்பாக அவளை வளர்த்தான். ஸகரிய்யாவை அவளுக்கு பொறுப்பாளராக்கினான். ஸகரிய்யா மாடத்தில் அவளிடம் நுழையும்போதெல்லாம், ஓர் உணவை அவளிடம் பெற்றார். "மர்யமே! எங்கிருந்து உனக்கு இது (வருகிறது)?" எனக் கூறினார். "இது அல்லாஹ்விடமிருந்து (வருகிறது). நிச்சயமாக அல்லாஹ் தான் நாடுகிறவருக்கு கணக்கின்றி வழங்குவான்" எனக் கூறினாள்.
Tamil Translation - Omar Sharifஆகவே, அவளுடைய இறைவன் அவளை (அன்போடு) அழகாக அங்கீகரித்தான். இன்னும், அழகியமுறையில் அவளை வளரச் செய்தான். இன்னும், ஸகரிய்யாவை அவளுக்கு பொறுப்பாளராக்கினான். (அவள் தங்கி இருந்த) மாடத்தில் ஸகரிய்யா அவளிடம் நுழையும்போதெல்லாம், ஓர் உணவை அவளிடம் கண்டார். “மர்யமே! எங்கிருந்து உனக்கு இது (வருகிறது)?’’ எனக் கூறினார். “இது அல்லாஹ்விடமிருந்து (வருகிறது). நிச்சயமாக அல்லாஹ் - தான் நாடுகிறவருக்கு - கணக்கின்றி வழங்குவான்’’ என அவள் கூறினாள்.
Tamil Translation - Abdulhamid Baqawi37. ஆகவே, அவருடைய இறைவன் அதை அன்பாய் அங்கீகரித்து பரிசுத்தமாகவும், அழகாகவும் அதை வளரச் செய்து அதை (வளர்க்க) ஜகரிய்யா பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் செய்தான். ஜகரிய்யா அப்பிள்ளை இருந்த மாடத்திற்குள் நுழையும் போதெல்லாம், அவளிடத்தில் (ஏதேனும்) உணவுப் பொருள் இருப்பதைக் கண்டு ‘‘மர்யமே! இது உனக்கு ஏது? (எங்கிருந்து வந்தது?)'' என்று கேட்பார். அதற்கவள் ‘‘இது அல்லாஹ்விடமிருந்துதான் (வருகிறது). ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், தான் விரும்பியவர்களுக்கு அளவின்றியே உணவளிக்கிறான்'' என்று கூறுவாள்.