إِذْ قَالَتِ ٱمْرَأَتُ عِمْرَٰنَ رَبِّ إِنِّى نَذَرْتُ لَكَ مَا فِى بَطْنِى مُحَرَّرًا فَتَقَبَّلْ مِنِّىٓ إِنَّكَ أَنتَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஇம்ரானுடைய மனைவி, "என் இறைவா! நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ளதை அர்ப்பணிக்கப்பட்டதாக உனக்கு நேர்ச்சை செய்தேன். ஆகவே, (அதை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்! நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன், மிக அறிந்தவன்" எனக் கூறியசமயத்தை நினைவு கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif(நபியே!) இம்ரானுடைய மனைவி, “என் இறைவா! நிச்சயமாக நான் என் வயிற்றிலுள்ள(குழந்)தை(யை இறையாலயத்தில் உன்னை வணங்க) அர்ப்பணிக்கப்பட்டதாக உனக்கு நேர்ச்சை செய்தேன். ஆகவே, (அதை) என்னிடமிருந்து ஏற்றுக்கொள்! நிச்சயமாக நீதான் நன்கு செவியுறுபவன், நன்கறிந்தவன்’’ எனக் கூறிய சமயத்தை நினைவு கூர்வீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi35. இம்ரானுடைய மனைவி (கர்ப்பமானபொழுது ஆண் குழந்தை பெற விரும்பி இறைவனை நோக்கி) ‘‘என் இறைவனே! நிச்சயமாக நான் என் கர்ப்பத்திலுள்ளதை உனக்கு முற்றிலும் அர்ப்பணம் செய்துவிட நேர்ச்சை செய்து கொண்டேன். ஆதலால், (அதை) என்னிடமிருந்து நீ அங்கீகரித்துக் கொள்வாயாக! நிச்சயமாக நீதான் (பிரார்த்தனைகளை) நன்கு செவியுறுபவன், (மனதில் உள்ளவற்றை) நன்கறிபவன்'' என்று (பிரார்த்தித்துக்) கூறியபின்,