caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 20

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:20

فَإِنْ حَآجُّوكَ فَقُلْ أَسْلَمْتُ وَجْهِىَ لِلَّهِ وَمَنِ ٱتَّبَعَنِ وَقُل لِّلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ وَٱلْأُمِّيِّـۧنَ ءَأَسْلَمْتُمْ فَإِنْ أَسْلَمُوا۟ فَقَدِ ٱهْتَدَوا۟ وَّإِن تَوَلَّوْا۟ فَإِنَّمَا عَلَيْكَ ٱلْبَلَٰغُ وَٱللَّهُ بَصِيرٌۢ بِٱلْعِبَادِ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே! இதற்குப் பின்னும்) அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) "நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வுக்கு (முற்றிலும்) எங்கள் முகங்களை பணியவைத்தோம்" எனக் கூறுவீராக. இன்னும்வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், (சிலை வணங்கும்) பாமரர்களுக்கும் கூறுவீராக: "நீங்களும் (அவ்வாறே உங்கள் முகங்களை) பணியவைக்கிறீர்களா?" (அவ்வாறே) அவர்களும் பணியவைத்தால் திட்டமாக அவர்கள் நேர்வழி அடைவார்கள். அவர்கள் (புறக்கணித்து) திரும்பினால், உம்மீதெல்லாம் (சத்தியத்தை) தெரிவிப்பதுதான் (கடமை). அல்லாஹ் அடியார்களை உற்று நோக்குபவன்.
Tamil Translation - Omar Sharifஆக, (நபியே! இதற்குப் பின்னும்) அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி), நீர் கூறுவீராக: “நிச்சயமாக நான் எனது முகத்தை அல்லாஹ்விற்கு பணிய வைத்தேன். இன்னும், என்னை பின்பற்றியவர்களும் (தங்கள் முகங்களை அல்லாஹ்விற்கு பணிய வைத்தார்கள். நாங்கள் அனைவரும் முழுமையாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்டோம்).’’ இன்னும், “வேதம் கொடுக்கப்பட்டவர்களுக்கும், (சிலை வணங்கும்) பாமரர்களுக்கும் கூறுவீராக: “நீங்களும் (அவ்வாறே உங்கள் முகங்களை) பணியவைக்கிறீர்களா? (-உண்மையான இறைவனாகிய அல்லாஹ்வை மட்டும் வணங்குவீர்களா?)” ஆக, அவர்களும் (தங்கள் முகங்களை அல்லாஹ்விற்கு மட்டும்) பணியவைத்தால் திட்டமாக அவர்கள் நேர்வழி அடைவார்கள். இன்னும், அவர்கள் (இந்த அழைப்பை) புறக்கணித்தால், உம்மீது கடமை எல்லாம் (சத்தியத்தை) எடுத்துச் சொல்வதுதான். அல்லாஹ் (தனது) அடியார்களை உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi20. (நபியே!) இதற்குப் பின்னும் அவர்கள் உம்முடன் தர்க்கித்தால் (அவர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நானும் என்னைப் பின்பற்றியவர்களும் அல்லாஹ்வு(டைய கட்டளைகளு)க்கு முற்றிலும் தலை சாய்த்துவிட்டோம் என்று கூறி வேதமளிக்கப்பட்டவர்களையும், (சிலையை வணங்கும்) பாமரர்களையும் நோக்கி ‘‘நீங்களும் (அவ்வாறே) அல்லாஹ்வுக்குத் தலை சாய்க்கிறீர்களா?'' என்று கேட்பீராக. (அவ்வாறே) அவர்களும் தலைசாய்த்தால் நிச்சயமாக அவர்கள் நேரான பாதையை அடைந்து விட்டார்கள். அவர்கள் புறக்கணித்து விட்டால் (அதற்காக நீர் கவலைப்படாதீர். நம் தூதை அவர்களுக்குத்) தெரிவிப்பதுதான் உம் மீது கடமையாக இருக்கிறது. அல்லாஹ் (தன்) அடியார்களை உற்று நோக்குகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70