caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 19

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:19

إِنَّ ٱلدِّينَ عِندَ ٱللَّهِ ٱلْإِسْلَٰمُ وَمَا ٱخْتَلَفَ ٱلَّذِينَ أُوتُوا۟ ٱلْكِتَٰبَ إِلَّا مِنۢ بَعْدِ مَا جَآءَهُمُ ٱلْعِلْمُ بَغْيًۢا بَيْنَهُمْ وَمَن يَكْفُرْ بِـَٔايَٰتِ ٱللَّهِ فَإِنَّ ٱللَّهَ سَرِيعُ ٱلْحِسَابِ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ்விடம் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் (‘இதுதான் உண்மையான வேதம்Õ என்ற) அறிவு அவர்களுக்கு வந்த பின்னரே தவிர மாறுபடவில்லை. ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் கணக்கெடுப்பதில் விரைவானவன்.
Tamil Translation - Omar Sharifநிச்சயமாக அல்லாஹ்விடம் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் கொடுக்கப்பட்டவர்கள் தங்களுக்கு மத்தியில் உள்ள பொறாமையினால் (‘இதுதான் உண்மையான வேதம்’ என்ற) அறிவு அவர்களுக்கு வந்த பின்னரே தவிர (இதில்) மாறுபடவில்லை. ஆகவே, எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பாரோ, நிச்சயமாக அல்லாஹ் (அவரை) விசாரிப்பதில் மிக விரைவானவன்.
Tamil Translation - Abdulhamid Baqawi19. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான். வேதம் அளிக்கப்பட்டவர்கள் (‘இதுதான் உண்மையான வேதம்' என்ற) ஞானம் அவர்களுக்கு கிடைத்த பின்னர் தங்களுக்கிடையே உள்ள பொறாமையின் காரணமாகவே (இதற்கு) மாறுபட்டனர். ஆகவே, எவர்கள் அல்லாஹ்வுடைய வசனங்களை நிராகரிக்கிறார்களோ அவர்களுடைய கணக்கை நிச்சயமாக அல்லாஹ் வெகு சீக்கிரத்தில் எடுப்பான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70