إِنَّ ٱلَّذِينَ يَكْفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلنَّبِيِّـۧنَ بِغَيْرِ حَقٍّ وَيَقْتُلُونَ ٱلَّذِينَ يَأْمُرُونَ بِٱلْقِسْطِ مِنَ ٱلنَّاسِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநிச்சயமாக அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்கள், நியாயமின்றி இறைத்தூதர்களை கொலை செய்பவர்கள், மக்களில் நீதத்தை ஏவுகிறவர்களை கொலை செய்பவர்கள், அ(த்தகைய)வர்களுக்கு துன்புறுத்தக்கூடிய வேதனையைக் கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif(நபியே!) நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிக்கிறார்களோ; இன்னும், நியாயமின்றி இறைத்தூதர்களை கொலை செய்கிறார்களோ; இன்னும், மக்களில் நீதத்தை ஏவுகிறவர்களை கொலை செய்கிறார்களோ அ(த்தகைய)வர்களுக்கு “துன்புறுத்தக்கூடிய தண்டனையைக் கொண்டு” நற்செய்தி கூறுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi21. நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்து, நியாயமின்றி இறைத்தூதர்களையும், நீதத்தை ஏவுகின்ற (மற்ற) மனிதர்களையும் கொலை செய்கிறார்களோ அவர்களுக்கு துன்புறுத்தும் வேதனையைக்கொண்டு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.