هَٰٓأَنتُمْ أُو۟لَآءِ تُحِبُّونَهُمْ وَلَا يُحِبُّونَكُمْ وَتُؤْمِنُونَ بِٱلْكِتَٰبِ كُلِّهِۦ وَإِذَا لَقُوكُمْ قَالُوٓا۟ ءَامَنَّا وَإِذَا خَلَوْا۟ عَضُّوا۟ عَلَيْكُمُ ٱلْأَنَامِلَ مِنَ ٱلْغَيْظِ قُلْ مُوتُوا۟ بِغَيْظِكُمْ إِنَّ ٱللَّهَ عَلِيمٌۢ بِذَاتِ ٱلصُّدُورِ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் இவர்களை(யா) நேசிக்கிறீர்கள்! அவர்கள் உங்களை நேசிப்பதில்லை. வேதம் எல்லாவற்றையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். அவர்கள் உங்களைச் சந்தித்தால், "நம்பிக்கை கொண்டோம்" எனக் கூறுகின்றனர். அவர்கள் (உங்களை விட்டு) தனித்தால் உங்கள் மீது (உள்ள) கோபத்தினால் (தங்கள்) விரல் நுனிகளை கடிக்கின்றனர். (நபியே!) கூறுவீராக: "உங்கள் கோபத்தினால் சாவுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்."
Tamil Translation - Omar Sharifநீங்கள் இவர்கள் மீது அன்பு காட்டுகிறீர்கள்! ஆனால், அவர்கள் உங்கள் மீது அன்பு காட்டுவதில்லை. எல்லா வேதங்களையும் நீங்கள் நம்பிக்கை கொள்கிறீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை.) அவர்கள் உங்களைச் சந்தித்தால், “நம்பிக்கை கொண்டோம்” எனக் கூறுகிறார்கள். அவர்கள் (உங்களை விட்டு) தனித்தால் உங்கள் மீது (உள்ள) கோபத்தினால் (தங்கள்) விரல் நுனிகளை கடிக்கிறார்கள். (நபியே!) கூறுவீராக: “உங்கள் கோபத்தில் நீங்கள் செத்து மடியுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் நெஞ்சங்களில் உள்ளவற்றை நன்கறிந்தவன்.’’
Tamil Translation - Abdulhamid Baqawi119. (நம்பிக்கையாளர்களே!) இவர்களையா நீங்கள் நேசிக்கிறீர்கள்! அவர்களோ உங்களை நேசிப்பதில்லை. நீங்கள் (அவர்களுடைய) வேதங்கள் அனைத்தையும் நம்பிக்கை கொள்கிறீர்கள். (அவர்கள் உங்கள் வேதத்தை நம்பிக்கை கொள்வதில்லை. எனினும்) அவர்கள் உங்களைச் சந்தித்தால், ‘‘(உங்கள் வேதத்தையும்) நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம்'' என்று (பொய்) கூறுகின்றனர். உங்களைவிட்டு விலகினாலோ (உங்கள் மீதுள்ள) கோபத்தினால் தங்கள் (கை) விரல்களையே கடித்துக் கொள்கின்றனர். ஆகவே, (நபியே! அவர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘உங்கள் கோபத்திலேயே நீங்கள் சாவீர்களாக! நிச்சயமாக அல்லாஹ் (உங்கள்) உள்ளங்களில் உள்ளவற்றை நன்கு அறிவான்.''