caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 118

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:118

يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ لَا تَتَّخِذُوا۟ بِطَانَةً مِّن دُونِكُمْ لَا يَأْلُونَكُمْ خَبَالًا وَدُّوا۟ مَا عَنِتُّمْ قَدْ بَدَتِ ٱلْبَغْضَآءُ مِنْ أَفْوَٰهِهِمْ وَمَا تُخْفِى صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ ٱلْـَٔايَٰتِ إِن كُنتُمْ تَعْقِلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாதவர்களிலிருந்து உற்ற நண்பர்களை ஆக்காதீர்கள். (அவர்கள்) உங்களுக்கு தீங்கிழைப்பதை குறைக்கமாட்டார்கள்; நீங்கள் துன்பப்படுவதை விரும்பினார்கள். அவர்களுடைய வாய்களிலிருந்து பகைமை வெளிப்பட்டுவிட்டது. அவர்களுடைய நெஞ்சங்கள் மறைப்பதோ (தீமையால் அதைவிட) மிகப் பெரியது. திட்டமாக அத்தாட்சிகளை உங்களுக்கு விவரித்தோம் (நீங்கள்) புரிபவர்களாக இருந்தால் (புரிந்து கொள்ளுங்கள்).
Tamil Translation - Omar Sharifநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாத மற்றவர்களில் உற்ற நண்பர்களை (உங்களுக்கு) ஏற்படுத்தாதீர்கள். அவர்கள் உங்களுக்கு தீங்கிழைப்பதில் குறைவு செய்யமாட்டார்கள்; நீங்கள் துன்பப்படுவதை (-சிரமப்படுவதை) அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்களிலிருந்து பகைமை வெளிப்பட்டுவிட்டது. இன்னும், (பகைமையில்) அவர்களுடைய நெஞ்சங்கள் மறைப்பதோ (தீமையால் அதைவிட) மிகப் பெரியது. திட்டமாக அத்தாட்சிகளை உங்களுக்கு விவரித்தோம், நீங்கள் புரிபவர்களாக இருந்தால்.
Tamil Translation - Abdulhamid Baqawi118. நம்பிக்கையாளர்களே! உங்(கள் மார்க்கத்தை சேர்ந்தவர்)களையன்றி (மற்றவர்களை) உங்களுக்கு மிக நெருக்கமானவர்களாக நீங்கள் ஆக்கிக் கொள்ளாதீர்கள். (ஏனென்றால்) அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைப்பதில் ஒரு சிறிதும் குறைவு செய்வதில்லை. உங்களுக்குத் துன்பம் ஏற்படுவதை அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுடைய வாய்(ச் சொற்)களைக் கொண்டே (அவர்களுடைய) பகைமை வெளிப்பட்டுவிட்டது. (உங்களைப் பற்றி) அவர்களுடைய உள்ளங்கள் மறைத்திருப்பவையோ மிகக் கொடியவை. நிச்சயமாக நாம் (அவர்களுடைய) அடையாளங்களை உங்களுக்கு விவரித்துவிட்டோம். நீங்கள் அறிவுடையவர்களாக இருந்தால் (அறிந்து கொள்ளலாம்.).
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70