إِن تَمْسَسْكُمْ حَسَنَةٌ تَسُؤْهُمْ وَإِن تُصِبْكُمْ سَيِّئَةٌ يَفْرَحُوا۟ بِهَا وَإِن تَصْبِرُوا۟ وَتَتَّقُوا۟ لَا يَضُرُّكُمْ كَيْدُهُمْ شَيْـًٔا إِنَّ ٱللَّهَ بِمَا يَعْمَلُونَ مُحِيطٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களை ஒரு நல்லது அடைந்தால் (அது) அவர்களுக்கு வருத்தம் தருகிறது. உங்களை ஒரு தீங்கு அடைந்தால் அதன் மூலம் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் பொறுத்தால், அல்லாஹ்வை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு சிறிதளவும் தீங்கிழைக்காது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்து (அறிந்து)ள்ளான்.
Tamil Translation - Omar Sharifஉங்களை ஒரு நல்லது அடைந்தால் (அது) அவர்களுக்கு வருத்தம் அளிக்கிறது. இன்னும், உங்களை ஒரு தீங்கு அடைந்தால் அதன் மூலம் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். நீங்கள் பொறுமையாக இருந்தால், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சினால் அவர்களின் சூழ்ச்சி உங்களுக்கு சிறிதளவும் தீங்கிழைக்காது. நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்வதை சூழ்ந்து (அறிந்து)ள்ளான்.
Tamil Translation - Abdulhamid Baqawi120. உங்களுக்கு ஒரு நன்மை ஏற்பட்டால் (அது) அவர்களை வருந்தச் செய்கிறது. உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டாலோ அதற்காக அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆகவே, நீங்கள் பொறுமையுடன் இருந்து (அவர்களை விட்டு) விலகியிருந்தால் அவர்களுடைய சூழ்ச்சி உங்களுக்கு எத்தகைய தீங்கையும் விளைவித்து விடாது. (ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் அவர்களுடைய செயல்களை நன்கு சூழ்ந்து கொள்வான்.