caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 112

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:112

ضُرِبَتْ عَلَيْهِمُ ٱلذِّلَّةُ أَيْنَ مَا ثُقِفُوٓا۟ إِلَّا بِحَبْلٍ مِّنَ ٱللَّهِ وَحَبْلٍ مِّنَ ٱلنَّاسِ وَبَآءُو بِغَضَبٍ مِّنَ ٱللَّهِ وَضُرِبَتْ عَلَيْهِمُ ٱلْمَسْكَنَةُ ذَٰلِكَ بِأَنَّهُمْ كَانُوا۟ يَكْفُرُونَ بِـَٔايَٰتِ ٱللَّهِ وَيَقْتُلُونَ ٱلْأَنۢبِيَآءَ بِغَيْرِ حَقٍّ ذَٰلِكَ بِمَا عَصَوا۟ وَّكَانُوا۟ يَعْتَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் எங்கு பெற்றுக் கொள்ளப்பட்டாலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டது. அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் மக்களின் கயிற்றைக் கொண்டுமே தவிர (அவர்கள் தப்பமுடியாது). அல்லாஹ்வின் கோபத்திலும் திரும்பிவிட்டார்கள். ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டது. அது, நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்துகொண்டும் இருந்த காரணத்தாலாகும். அது, அவர்கள் மாறுசெய்தார்கள், இன்னும் வரம்புமீறிக் கொண்டிருந்தார்கள் என்ற காரணத்தாலாகும்.
Tamil Translation - Omar Sharifஅவர்கள் எங்கு இருந்தாலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. எனினும், அல்லாஹ்வின் ஒப்பந்தம்; இன்னும், மக்களின் ஒப்பந்தத்தின் மூலமே தவிர அவர்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. இன்னும், அவர்கள் அல்லாஹ்வின் கோபத்தை சுமந்துகொண்டார்கள். ஏழ்மையும் அவர்கள் மீது விதிக்கப்பட்டது. அதற்கு காரணம், “நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரிப்பவர்களாக இருந்ததும், நியாயமின்றி நபிமார்களைக் கொலை செய்பவர்களாக இருந்ததும் ஆகும். இன்னும், அதற்கு காரணம் அவர்கள் மாறுசெய்ததும், (இறைக் கட்டளையை) மீறுபவர்களாக இருந்ததும் ஆகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi112. அவர்கள் எங்கு சென்றபோதிலும் அவர்கள் மீது இழிவு விதிக்கப்பட்டு விட்டது. (இவ்வேதமாகிய) அல்லாஹ்வின் கயிற்றைக் கொண்டும் (நம்பிக்கை கொண்ட) மனிதர்கள் (அளிக்கும் அபயமென்னும்) கயிற்றைக் கொண்டுமே தவிர (அவர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது). அல்லாஹ்வின் கோபத்திலும் அவர்கள் சிக்கிக் கொண்டார்கள். (வீழ்ச்சி என்னும்) துர்ப்பாக்கியமும் அவர்கள் மீது விதிக்கப்பட்டு விட்டது. இதன் காரணம் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வின் வசனங்களை (எப்பொழுதுமே) நிராகரித்துக் கொண்டும், நியாயமின்றி இறைத் தூதர்களைக் கொலை செய்து கொண்டும் இருந்ததுதான். தவிர, வரம்பு கடந்து பாவம் செய்து கொண்டிருந்ததும் இதற்குக் காரணமாகும்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70