caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 111

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:111

لَن يَضُرُّوكُمْ إِلَّآ أَذًى وَإِن يُقَٰتِلُوكُمْ يُوَلُّوكُمُ ٱلْأَدْبَارَ ثُمَّ لَا يُنصَرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(ஒரு சொற்ப) சிரமத்தைத் தவிர உங்களுக்கு அவர்கள் அறவே தீங்கு செய்யமுடியாது. உங்களிடம் அவர்கள் போரிட்டால் உங்களுக்கு (தங்கள்) பின்புறங்களைத் திருப்புவார்கள். (புறமுதுகிட்டு ஓடுவார்கள்.) பிறகு உதவி செய்யப்படமாட்டார்கள்.
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே! ஒரு சொற்ப) சிரமத்தைத் தவிர உங்களுக்கு அவர்கள் அறவே தீங்கு செய்யமுடியாது. இன்னும், உங்களிடம் அவர்கள் போரிட்டால் உங்களைவிட்டும் அவர்கள் புறமுதுகிட்டு ஓடுவார்கள். பிறகு, (அல்லாஹ்வின் புறத்திலிருந்து) அவர்கள் உதவி செய்யப்படமாட்டார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi111. (நம்பிக்கையாளர்களே!) இவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர்புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெறமாட்டார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70