caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Aal-i-Imraan அத்தியாயம், வசனம் 113

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 89 · 3:113

لَيْسُوا۟ سَوَآءً مِّنْ أَهْلِ ٱلْكِتَٰبِ أُمَّةٌ قَآئِمَةٌ يَتْلُونَ ءَايَٰتِ ٱللَّهِ ءَانَآءَ ٱلَّيْلِ وَهُمْ يَسْجُدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்கள் சமமானவர்களாக இல்லை. வேதக்காரர்களில் நீதமான ஒரு கூட்டத்தினர் இரவு நேரங்களில் அல்லாஹ்வின் வசனங்களை ஓதுகிறார்கள்; அவர்கள் சிரம் பணி(ந்து தொழு)கிறார்கள். (காயிமா: நின்று தொழுபவர்கள், நீதமானவர்கள், மார்க்கத்தை உறுதியாக பின்பற்றுபவர்கள்.)
Tamil Translation - Omar Sharif(வேதம் கொடுக்கப்பட்ட) அவர்கள் (எல்லோரும்) சமமானவர்களாக இல்லை. வேதக்காரர்களில் நீதமான ஒரு கூட்டத்தினர் இருக்கிறார்கள். அவர்கள் (இஸ்லாமை மார்க்கமாக ஏற்று) இரவு நேரங்களில் சிரம்பணிந்து தொழுதவர்களாக[1] அல்லாஹ்வின் வசனங்களை (தொழுகையில்) ஓதுகிறார்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi113. அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான (தீய)வர்கள் அல்லர். வேதத்தையுடைய இவர்களில் நல்லோரான ஒரு கூட்டத்தினர் இருக்கின்றனர். அவர்கள் இரவு காலங்களில் அல்லாஹ்வுடைய வசனங்களை ஓதி நின்று சிரம்பணிந்து வணங்குகின்றனர்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70