caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 23

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:23

وَلَمَّا وَرَدَ مَآءَ مَدْيَنَ وَجَدَ عَلَيْهِ أُمَّةً مِّنَ ٱلنَّاسِ يَسْقُونَ وَوَجَدَ مِن دُونِهِمُ ٱمْرَأَتَيْنِ تَذُودَانِ قَالَ مَا خَطْبُكُمَا قَالَتَا لَا نَسْقِى حَتَّىٰ يُصْدِرَ ٱلرِّعَآءُ وَأَبُونَا شَيْخٌ كَبِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர் மத்யனுடைய நீர்நிலைக்கு வந்தபோது அதனருகில் மக்களில் (தங்களது கால்நடைகளுக்கு) நீர் புகட்டுகின்ற ஒரு கூட்டத்தைக் கண்டார். அவர்கள் அன்றி (தங்கள் ஆடுகளை மக்களை விட்டும் அங்கும் இங்கும் ஓடுவதை விட்டும்) தடுத்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் கண்டார். அவர் கேட்டார்: “உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?” அவ்விருவரும் கூறினர்: நாங்கள் (எங்கள் கால்நடைகளுக்கு) நீர் புகட்ட மாட்டோம். மேய்ப்பவர்கள் (தங்களது கால்நடைகளை இங்கிருந்து) வெளியேற்றாதவரை. எங்கள் தந்தையோ வயதான பெரியவர் ஆவார்.
Tamil Translation - Omar Sharifஅவர் மத்யனுடைய நீர்நிலைக்கு வந்தபோது அதனருகில் (தங்களது கால்நடைகளுக்கு) நீர் புகட்டுகின்ற சில மக்களைக் கண்டார். அவர்கள் அல்லாமல் (தங்கள் ஆடுகளை மக்களின் ஆடுகளை விட்டும், அவை அங்கும் இங்கும் ஓடுவதை விட்டும்) தடுத்துக் கொண்டிருந்த இரண்டு பெண்களையும் கண்டார். அவர் கேட்டார்: “உங்கள் இருவரின் பிரச்சனை என்ன?” அவ்விருவரும் கூறினார்கள்: “மேய்ப்பவர்கள் (தங்களது கால்நடைகளுக்கு நீர் புகட்டிவிட்டு, அவற்றை இங்கிருந்து) வெளியேற்றாதவரை நாங்கள் (எங்கள் கால்நடைகளுக்கு) நீர் புகட்ட இயலாது. இன்னும், எங்கள் தந்தையோ வயதான பெரியவர் ஆவார்.”
Tamil Translation - Abdulhamid Baqawi23. (அவ்வாறு சென்ற அவர்) மத்யன் நகரத்தி(ன் வெளியி)லிருந்த ஒரு கிணற்றின் சமீபமாக வந்தபொழுது ஒரு கூட்டத்தினர் (தங்கள் ஆடு, மாடு, ஆகிய கால் நடைகளுக்குத்) தண்ணீர் புகட்டிக் கொண்டிருப்பதையும், அதற்கருகில் இரு பெண்கள் (தங்கள் ஆட்டு மந்தையை) வளைத்து(த் தடுத்து நிறுத்தி)க் கொண்டிருப்பதையும் கண்டு (அப்பெண்களை நோக்கி) ‘‘ உங்கள் விஷயமென்ன? (எதற்காக நீங்கள் தேங்கி நிற்கிறீர்கள்?)'' என்று கேட்டார். அதற்கு அவ்விரு பெண்களும் ‘‘ இம்மேய்ப்பர்கள் (தங்கள் கால்நடைகளுக்குத் தண்ணீர் புகட்டிக்கொண்டு இங்கிருந்து) விலகும் வரை நாங்கள் (எங்கள் ஆடுகளுக்குத்) தண்ணீர் புகட்ட முடியாது. எங்கள் தந்தையோ வயது முதிர்ந்த கிழவர். (அவர் இங்கு வர முடியாததால் நாங்களே இவற்றை ஓட்டி வந்திருக்கிறோம்)'' என்றார்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70