caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Qasas அத்தியாயம், வசனம் 24

மக்கா · இறக்கப்பட்ட வரிசை 49 · 28:24

فَسَقَىٰ لَهُمَا ثُمَّ تَوَلَّىٰٓ إِلَى ٱلظِّلِّ فَقَالَ رَبِّ إِنِّى لِمَآ أَنزَلْتَ إِلَىَّ مِنْ خَيْرٍ فَقِيرٌ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஆகவே, அவர் அவ்விருவருக்காக (அவ்விருவரின் கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார். பிறகு, நிழலின் பக்கம் (அதில் அமர்ந்து இளைப்பாறுவதற்காக) திரும்பிச் சென்றார். அவர் கூறினார்: என் இறைவா! நீ எனக்கு இறக்கிய நன்மையின் பக்கம் (-நல்ல உணவின் பக்கம்) நிச்சயமாக நான் தேவை உள்ளவன். (ஆகவே, என் பசிக்கு உணவளிப்பாயாக!)
Tamil Translation - Omar Sharifஆக, அவர் அவ்விருவருக்காக (அவ்விருவரின் கால்நடைகளுக்கு) நீர் புகட்டினார். பிறகு, நிழலி(ல் அமர்ந்து இளைப்பாறுவதற்காக அத)ன் பக்கம் திரும்பிச் சென்றார். அவர் கூறினார்: “என் இறைவா! நீ எனக்கு இறக்கிய நன்மையின் பக்கம் நிச்சயமாக நான் தேவை உள்ளவன். (ஆகவே, என் பசிக்கு உணவளி!)”
Tamil Translation - Abdulhamid Baqawi24. (இதைச் செவியுற்ற மூஸா) அவ்விரு பெண்களுடைய கால்நடைகளுக்குத் தண்ணீர் (இறைத்துப்) புகட்டிவிட்டு(ச் சிறிது) விலகி ஒரு (மரத்தின்) நிழலில் அமர்ந்துகொண்டு ‘‘என் இறைவனே! எதை நீ எனக்குத் தந்தபோதிலும் நிச்சயமாக நான் அதை விரும்பக்கூடியவனாகவே இருக்கிறேன்'' என்று பிரார்த்தித்தார்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70