caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 96

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:96

وَلَتَجِدَنَّهُمْ أَحْرَصَ ٱلنَّاسِ عَلَىٰ حَيَوٰةٍ وَمِنَ ٱلَّذِينَ أَشْرَكُوا۟ يَوَدُّ أَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ أَلْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِهِۦ مِنَ ٱلْعَذَابِ أَن يُعَمَّرَ وَٱللَّهُ بَصِيرٌۢ بِمَا يَعْمَلُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(நபியே!) மக்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் வாழ்க்கையின் மீது பேராசைக்காரர்களாக அவர்களை நிச்சயமாகக் காண்பீர்! அவர்களில் ஒருவர் "தான் ஆயிரம் ஆண்டு(கள்) வாழ்வு கொடுக்கப்பட வேண்டுமே?" என்று விரும்புவார். (நீண்ட நாள்) வாழ்வு கொடுக்கப்படுவது வேதனையிலிருந்து அவரைத் தப்பிக்க வைத்துவிடக்கூடியதில்லை. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Omar Sharifஇன்னும் (நபியே! பொதுவாக எல்லா) மக்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (உலக) வாழ்க்கையின் மீது பேராசைக்காரர்களாக அவர்களை (-யூதர்களை) நிச்சயமாக நீர் காண்பீர்! அவர்களில் ஒருவர், “அவர் ஆயிரம் ஆண்டு(கள்) உயிரோடு இருக்க வேண்டுமே?” என்று விரும்புவார். அவர் (நீண்ட காலம்) வயது நீட்டிக்கப்படுவது (அல்லாஹ்வின்) தண்டனையிலிருந்து அவரைத் தப்ப வைக்கக்கூடியதில்லை. அல்லாஹ், அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi96. மேலும், (நபியே! அந்த யூதர்கள்) மற்ற மனிதர்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (நீண்ட நாள்) உயிர்வாழ மிகவும் பேராசை உடையவர்களாக இருப்பதை நிச்சயம் காண்பீர்! அவர்களில் ஒவ்வொருவனும் ‘‘தான் ஆயிரம் ஆண்டுகள் உயிர் வாழ வேண்டுமே?'' என்று விரும்புவான். (அவ்வாறு நீண்ட நாள்) உயிருடன் இருக்க அவனை விட்டுவைத்தாலும் அது வேதனையிலிருந்து ஒரு சிறிதும் அவனைத் தப்பிக்க வைத்துவிடாது. அல்லாஹ் அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70