قُلْ مَن كَانَ عَدُوًّا لِّجِبْرِيلَ فَإِنَّهُۥ نَزَّلَهُۥ عَلَىٰ قَلْبِكَ بِإِذْنِ ٱللَّهِ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وَبُشْرَىٰ لِلْمُؤْمِنِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"(உங்களில்) யார் ஜிப்ரீலுக்கு எதிரியாகி விட்டார்? நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் அனுமதி கொண்டு அதை அதற்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாகவும், நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் உம் உள்ளத்தின் மீது இறக்கினார்" எனக் கூறுவீராக!
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “(உங்களில்) யார் ஜிப்ரீலுக்கு எதிரியாக ஆகிவிட்டார்? ஆக, நிச்சயமாக (ஜிப்ரீலாகிய) அவர் அல்லாஹ்வின் அனுமதியுடன் அதை - அதற்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்தக்கூடியதாகவும், நேர்வழியாகவும், நம்பிக்கையாளர்களுக்கு நற்செய்தியாகவும் - உமது உள்ளத்தின் மீது இறக்கினார்.”
Tamil Translation - Abdulhamid Baqawi97. ‘‘(உங்களில்) எவர் ஜிப்ரீலுக்கு எதிரி'' என (நபியே! யூதர்களை)க் கேட்பீராக. நிச்சயமாக அவர் இதை அல்லாஹ்வின் கட்டளைப்படியே உமது உள்ளத்தில் இறக்கி வைத்தார். இது தனக்கு முன்னுள்ள (வேதத்)தை உண்மைப்படுத்துவதாகவும், நேரான வழியை அறிவிக்கக்கூடியதாகவும், நம்பிக்கை உடையவர்களுக்கு நற்செய்தியாகவும் இருக்கிறது.