caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 93

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:93

وَإِذْ أَخَذْنَا مِيثَٰقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ ٱلطُّورَ خُذُوا۟ مَآ ءَاتَيْنَٰكُم بِقُوَّةٍ وَٱسْمَعُوا۟ قَالُوا۟ سَمِعْنَا وَعَصَيْنَا وَأُشْرِبُوا۟ فِى قُلُوبِهِمُ ٱلْعِجْلَ بِكُفْرِهِمْ قُلْ بِئْسَمَا يَأْمُرُكُم بِهِۦٓ إِيمَٰنُكُمْ إِن كُنتُم مُّؤْمِنِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களுக்கு மேல் மலையை நாம் உயர்த்தி, "உங்களுக்கு நாம் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள் (பின்பற்றுங்கள்); செவிசாயுங்கள்" என உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். செவியுற்றோம் (என்று நாவாலும்); மாறுசெய்தோம் என்று (உள்ளத்தாலும் அவர்கள்) கூறினார்கள். அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்றை (வணங்கும் மோகம்) ஊட்டப்பட்டார்கள். நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது மிகக் கெட்டது என்று (நபியே!) கூறுவீராக!
Tamil Translation - Omar Sharifஇன்னும், உங்களுக்கு மேல் மலையை நாம் உயர்த்தி, “உங்களுக்கு நாம் கொடுத்ததைப் பலமாகப் பிடியுங்கள் (பின்பற்றுங்கள்); செவிசாயுங்கள்” என உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். செவியுற்றோம் (என்று நாவாலும்); மாறுசெய்தோம் என்று (உள்ளத்தாலும் அவர்கள்) கூறினார்கள். அவர்களுடைய நிராகரிப்பின் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் காளைக் கன்றுடைய மோகம் (- அதை வணங்க வேண்டுமென்ற ஆசை) மிகைத்து விட்டது. “நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் நம்பிக்கை உங்களுக்கு எதை ஏவுகிறதோ அது மிகக் கெட்டது” என்று (நபியே!) கூறுவீராக!
Tamil Translation - Abdulhamid Baqawi93. உங்க(ள் மூதாதை)களிடம் நாம் வாக்குறுதி வாங்கிய நேரத்தில் அவர்களுக்குமேல் (‘தூர்') மலையை உயர்த்தி ‘‘உங்களுக்கு நாம் கொடுத்த (தவ்றாத்)தை உறுதியாகக் கடைப்பிடியுங்கள். (அதற்குச்) செவிசாயுங்கள்'' என்று கூறியதற்கு (அவர்கள் ‘‘நீங்கள் கூறியதைச்) செவியுற்றோம். (ஆனால் அதற்கு) மாறு செய்வோம்'' என்று கூறினார்கள். ஆகவே, அவர்கள் (நம் கட்டளையை) நிராகரித்(து மாறு செய்)ததன் காரணமாக அவர்களுடைய உள்ளங்களில் ஒரு காளைக் கன்று(டைய பிரியம்) ஊட்டப்பட்டார்கள். ‘‘(இந்நிலையிலும்) நீங்கள் (தவ்றாத்தை) நம்பிக்கை கொண்டவர்கள் என்(று உங்களைக் கூறுவதென்)றால் இவ்வாறு செய்யும்படி உங்களைத் தூண்டும் அந்த நம்பிக்கை (மிகக்) கெட்டது'' என்று (நபியே!) கூறுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70