قُلْ إِن كَانَتْ لَكُمُ ٱلدَّارُ ٱلْـَٔاخِرَةُ عِندَ ٱللَّهِ خَالِصَةً مِّن دُونِ ٱلنَّاسِ فَتَمَنَّوُا۟ ٱلْمَوْتَ إِن كُنتُمْ صَٰدِقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version"(யூதர்களே) அல்லாஹ்விடம் (சொர்க்கமெனும்) மறுமை வீடு (மற்ற) மக்களுக்கு அன்றி உங்களுக்கு மட்டும் என்றிருந்தால், நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்" என (நபியே) கூறுவீராக.
Tamil Translation - Omar Sharif(நபியே!) கூறுவீராக: “(யூதர்களே!) அல்லாஹ்விடம் (சொர்க்கம் என்ற) மறுமை வீடு (மற்ற) மக்களுக்கு அன்றி (விசேஷமாக) உங்களுக்கு மட்டும் என்று இருந்தால், நீங்கள் (உங்கள் கொள்கையில்) உண்மையாளர்களாக இருந்தால் மரணத்தை விரும்புங்கள்.”
Tamil Translation - Abdulhamid Baqawi94. ‘‘(யூதர்களே!) அல்லாஹ்விடமிருக்கும் மறுமை(யின் சொர்க்க) வீடு (மற்ற) மனிதர்களுக்கு இல்லாமல் உங்களுக்கே சொந்தமென (கூறுகின்ற) நீங்கள் உண்மை கூறுபவர்களாக இருந்தால் (உங்களுக்குச் சொந்தமான அவ்வீட்டிற்குச் செல்வதற்கு) நீங்கள் மரணத்தை விரும்புங்கள்'' என (நபியே!) கூறுவீராக.