caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 83

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:83

وَإِذْ أَخَذْنَا مِيثَٰقَ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا ٱللَّهَ وَبِٱلْوَٰلِدَيْنِ إِحْسَانًا وَذِى ٱلْقُرْبَىٰ وَٱلْيَتَٰمَىٰ وَٱلْمَسَٰكِينِ وَقُولُوا۟ لِلنَّاسِ حُسْنًا وَأَقِيمُوا۟ ٱلصَّلَوٰةَ وَءَاتُوا۟ ٱلزَّكَوٰةَ ثُمَّ تَوَلَّيْتُمْ إِلَّا قَلِيلًا مِّنكُمْ وَأَنتُم مُّعْرِضُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version"நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள்; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; மக்களிடம் அழகியதைக் கூறுங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள், ஸகாத்தை கொடுங்கள்" என்று இஸ்ராயீலுடைய சந்ததிகளின் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு உங்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள் இந்த உறுதிமொழியிலிருந்து) திரும்பிவிட்டீர்கள். நீங்களோ புறக்கணிப்பவர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், (யூதர்களே!) “நீங்கள் அல்லாஹ்வைத் தவிர வணங்காதீர்கள்; பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை (-உதவி உபகாரம்) செய்யுங்கள்; மக்களிடம் அழகியதைக் கூறுங்கள்; தொழுகையை நிலை நிறுத்துங்கள்; ஸகாத்தை கொடுங்கள்” என்று (உங்கள் மூதாதைகளாகிய) இஸ்ராயீலுடைய சந்ததிகளின் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, உங்களில் குறைவானவர்களைத் தவிர (மற்ற அனைவரும் இந்த ஒப்பந்தத்திலிருந்து) திரும்பிவிட்டீர்கள். இன்னும் நீங்கள் (எப்போதும் அல்லாஹ்வின் கட்டளைகளை) புறக்கணிப்பவர்கள் ஆவீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi83. மேலும், (நினைத்துப் பாருங்கள்:) இஸ்ராயீலின் சந்ததிகளிடம் ‘‘நீங்கள் அல்லாஹ்வைத் தவிர (வேறொன்றையும்) வணங்காதீர்கள்; தாய், தந்தைக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; அனைத்து மனிதர்களிடமும் அழகாகப் பேசுங்கள் (நல்ல பேச்சுகளை பேசுங்கள்); தொழுகையை நிலைநிறுத்துங்கள்; ஜகாத்து கொடுத்து வாருங்கள்'' என்று நாம் வாக்குறுதி வாங்கியபொழுது, உங்களில் சிலரைத் தவிர மற்ற அனைவரும் புறக்கணித்து (மாறி) விட்டீர்கள். (எப்பொழுதும், இவ்வாறே) நீங்கள் புறக்கணித்தே வந்திருக்கிறீர்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70