caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 84

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:84

وَإِذْ أَخَذْنَا مِيثَٰقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَآءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُم مِّن دِيَٰرِكُمْ ثُمَّ أَقْرَرْتُمْ وَأَنتُمْ تَشْهَدُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionநீங்கள் உங்கள் (மக்களுடைய) இரத்தங்களை ஓட்டாதீர்கள்; உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மக்க)ளை வெளியேற்றாதீர்கள் என்று உங்கள் உறுதிமொழியை நாம் வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, நீங்களே சாட்சிகளாக இருக்க (அதை) உறுதிப்படுத்தினீர்கள்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், நீங்கள் உங்கள் (மக்களுடைய) இரத்தங்களை ஓட்டாதீர்கள்; உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் மக்க)ளை வெளியேற்றாதீர்கள் என்று நாம் உங்களின் உறுதிமொழியை வாங்கிய சமயத்தை நினைவு கூருங்கள். பிறகு, நீங்களே சாட்சிகளாக இருக்கும் நிலையில் (அதை) ஒப்புக்கொண்டு உறுதிப்படுத்தினீர்கள்.
Tamil Translation - Abdulhamid Baqawi84. மேலும், உங்கள் (சகோதரர்களுடைய) இரத்தங்களை ஓட்டாதீர்கள் என்றும், உங்கள் இல்லங்களை விட்டு உங்க(ள் சகோதரர்க)ளை வெளியேற்றாதீர்கள் என்றும், உங்(கள் மூதாதை)களிடம் நாம் உறுதிமொழி வாங்கியதை நீங்களும் (மனம் விரும்பி சம்மதித்து) அதை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள் என்பதை நினைத்துப் பாருங்கள்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70