caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 266

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:266

أَيَوَدُّ أَحَدُكُمْ أَن تَكُونَ لَهُۥ جَنَّةٌ مِّن نَّخِيلٍ وَأَعْنَابٍ تَجْرِى مِن تَحْتِهَا ٱلْأَنْهَٰرُ لَهُۥ فِيهَا مِن كُلِّ ٱلثَّمَرَٰتِ وَأَصَابَهُ ٱلْكِبَرُ وَلَهُۥ ذُرِّيَّةٌ ضُعَفَآءُ فَأَصَابَهَآ إِعْصَارٌ فِيهِ نَارٌ فَٱحْتَرَقَتْ كَذَٰلِكَ يُبَيِّنُ ٱللَّهُ لَكُمُ ٱلْـَٔايَٰتِ لَعَلَّكُمْ تَتَفَكَّرُونَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் ஒருவர் தமக்கு பேரிச்சங்கனிகள் இன்னும் திராட்சைகளின் ஒரு தோட்டம் இருந்து, அதன் கீழ் ஆறுகள் ஓட, அதில் எல்லாப் பழங்களும் அவருக்கு இருக்க, முதுமை அவரை அடைந்து, இயலாத குழந்தைகளும் அவருக்கு இருக்க, நெருப்புள்ள புயல் காற்று அதை அடைந்து அது எரித்து விடுவதை விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக, அல்லாஹ் அத்தாட்சிகளை உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிறான்.
Tamil Translation - Omar Sharifஉங்களில் ஒருவர் - அவருக்கு பேரீச்சங்கனிகள் இன்னும் திராட்சைகளின் ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழ் ஆறுகள் ஓடுகின்றன. அதில் எல்லாப் பழங்களும் அவருக்கு இருக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. இயலாத பலவீனமான குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். ஆக, (இந்த நிலையில்) நெருப்புடன் கூடிய புயல் காற்று அதை அடைந்து, அதுவோ எரித்து (சாம்பலாகி) விடுவதை - விரும்புவாரா? நீங்கள் சிந்திப்பதற்காக, அல்லாஹ் அத்தாட்சிகளை உங்களுக்கு இவ்வாறு விவரிக்கிறான்.
Tamil Translation - Abdulhamid Baqawi266. உங்களில் யார்தான் (இதை) விரும்புவார்: ஒருத்தருக்கு பேரீச்சை மற்றும் திராட்சைகளின் ஒரு தோப்பு இருக்கிறது. அதில் நீரருவிகள் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கின்றன. அதிலிருந்து எல்லா வகை கனிவர்க்கங்களும் அவருக்குக் கிடைக்கின்றன. முதுமை அவரை அடைந்தது. (சம்பாதிக்க) இயலாத பல சிறு குழந்தைகளும் அவருக்கு இருக்கின்றனர். (இந்த நிலைமையில்) நெருப்புடன் கூடிய புயல் காற்று அடித்து அதை எரித்துவிட்டது. (இத்தகைய நிலைமையை யார்தான் விரும்புவார்?) நீங்கள் ஆராய்ந்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு (உதாரணங்களைக் கொண்டு) இப்படி தெளிவுபடுத்துகிறான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70