وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ ٱللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوٓا۟ أَنَّىٰ يَكُونُ لَهُ ٱلْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِٱلْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِّنَ ٱلْمَالِ قَالَ إِنَّ ٱللَّهَ ٱصْطَفَىٰهُ عَلَيْكُمْ وَزَادَهُۥ بَسْطَةً فِى ٱلْعِلْمِ وَٱلْجِسْمِ وَٱللَّهُ يُؤْتِى مُلْكَهُۥ مَن يَشَآءُ وَٱللَّهُ وَٰسِعٌ عَلِيمٌ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅவர்களுடைய நபி, "நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்" என்று அவர்களுக்குக் கூறினார். "எங்கள் மீது ஆட்சி (செலுத்த) அவருக்கு (தகுதி) எப்படி இருக்கும்? அவரைவிட நாங்கள் ஆட்சிக்கு மிகவும் தகுதியுடையவர்கள். அவர் செல்வத்தின் வசதி கொடுக்கப்படவில்லையே" என்று (அம்மக்கள்) கூறினார்கள். "நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்தான். (போர்க்) கல்வியிலும், உடலிலும் ஆற்றலை அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான். "அல்லாஹ், தான் நாடியவருக்கே தனது ஆட்சியைத் தருவான். அல்லாஹ் விசாலமானவன். மிக அறிபவன்" என்று (தூதர்) கூறினார்.
Tamil Translation - Omar Sharifஇன்னும், அவர்களுடைய நபி, “நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்’’ என்று அவர்களுக்குக் கூறினார். “எங்கள் மீது ஆட்சி (செலுத்த) அவருக்கு (தகுதி) எப்படி இருக்கும்? அவரைவிட நாங்கள் ஆட்சிக்கு மிகவும் தகுதியுடையவர்கள். அவர் செல்வத்தின் வசதி கொடுக்கப்படவில்லையே’’ என்று (அம்மக்கள்) கூறினார்கள். “நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்தான். இன்னும், (போர்க்) கல்வியிலும், உடலிலும் ஏராளமான ஆற்றலை (அபரிமிதமான திறமையை) அவருக்கு அதிகம் கொடுத்திருக்கிறான். அல்லாஹ், தான் நாடியவருக்கே தனது ஆட்சியைத் தருவான். அல்லாஹ் விசாலமானவன் மிக அறிந்தவன்’’ என்று (அந்த தூதர்) கூறினார்.
Tamil Translation - Abdulhamid Baqawi247. மேலும், அவர்களுடைய நபி அவர்களை நோக்கி ‘‘நிச்சயமாக அல்லாஹ் தாலூத்தை உங்களுக்கு அரசராக அனுப்பியிருக்கிறான்'' என்று கூறியதற்கு (அவர்கள்) ‘‘எங்கள் மீது அரசாலும் உரிமை அவருக்கு எவ்வாறு ஏற்படும். அவரை விட நாங்கள்தான் அரசாட்சி புரிய மிகத் தகுதியுடையவர்கள், (அரசாட்சி புரிவதற்கு அவசியமான) திரளான செல்வத்தையும் அவர் அடையவில்லை'' என்று கூறினார்கள். (அதற்கு அவர்களுடைய நபி) ‘‘நிச்சயமாக அல்லாஹ், உங்கள் மீது (ஆட்சி புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கிறான். அன்றி (போர்க்) கல்வியிலும், உட(ல் ஆற்ற)லிலிலிலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியும் இருக்கிறான். அல்லாஹ் தான் விரும்பியவர்களுக்கே தன் ஆட்சியை வழங்குவான். அல்லாஹ் (வழங்குவதில்) அதிக விசாலமானவன், (அரசாட்சி புரியத் தகுதியுடையவர்களை) நன்கறிந்தவன்'' என்று கூறினார்.