caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 246

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:246

أَلَمْ تَرَ إِلَى ٱلْمَلَإِ مِنۢ بَنِىٓ إِسْرَٰٓءِيلَ مِنۢ بَعْدِ مُوسَىٰٓ إِذْ قَالُوا۟ لِنَبِىٍّ لَّهُمُ ٱبْعَثْ لَنَا مَلِكًا نُّقَٰتِلْ فِى سَبِيلِ ٱللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِن كُتِبَ عَلَيْكُمُ ٱلْقِتَالُ أَلَّا تُقَٰتِلُوا۟ قَالُوا۟ وَمَا لَنَآ أَلَّا نُقَٰتِلَ فِى سَبِيلِ ٱللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِن دِيَٰرِنَا وَأَبْنَآئِنَا فَلَمَّا كُتِبَ عَلَيْهِمُ ٱلْقِتَالُ تَوَلَّوْا۟ إِلَّا قَلِيلًا مِّنْهُمْ وَٱللَّهُ عَلِيمٌۢ بِٱلظَّٰلِمِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Versionமூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளைச் சேர்ந்த தலைவர்களை நீர் கவனிக்கவில்லையா? "எங்களுக்கு ஓர் அரசரை அனுப்புவீராக! அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிவோம்" என்று தங்களுக்குரிய நபிக்கு அவர்கள் கூறியபோது. "போர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால் நீங்கள் போர் புரியாமல் இருக்கக்கூடுமா?" என்று கூறினார். "அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரியாதிருக்க எங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நாங்கள் எங்கள் இல்லங்கள் இன்னும் எங்கள் சந்ததிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம்" என்று கூறினார்கள். போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர (மற்றவர்கள் போரை விட்டு) விலகினார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன்.
Tamil Translation - Omar Sharif(நபியே!) மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் சந்ததிகளைச் சேர்ந்த (அந்த) பிரமுகர்களை நீர் கவனிக்கவில்லையா? “எங்களுக்கு ஓர் அரசரை அனுப்புவீராக! அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிவோம்” என்று தங்களது நபியிடம் அவர்கள் கூறியபோது, “போர் உங்கள் மீது கடமையாக்கப்பட்டால் நீங்கள் போர் புரியாமல் இருக்கக்கூடுமா?’’ என்று அ(ந்த நபியான)வர் கூறினார். “அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரியாதிருக்க எங்களுக்கு என்ன (நேர்ந்தது)? நாங்கள் எங்கள் இல்லங்கள் இன்னும் எங்கள் சந்ததிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளோம்” என்று அவர்கள் கூறினார்கள். ஆக, போர் அவர்கள் மீது கடமையாக்கப்பட்டபோது அவர்களில் குறைவானவர்களைத் தவிர (எல்லோரும் போரை விட்டு) விலகிவிட்டார்கள். அல்லாஹ் அநியாயக்காரர்களை நன்கறிந்தவன் ஆவான்.
Tamil Translation - Abdulhamid Baqawi246. (நபியே!) இஸ்ராயீலின் சந்ததிகளில் மூஸாவுக்குப் பின் இருந்த தலைவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள்) ‘‘அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் புரிய எங்களுக்கு(த் தலைமை வகிக்கின்ற) ஓர் அரசனை அனுப்பிவைப்பீராக!'' என்று தங்கள் நபியிடம் கூறியபோது, (அவர்) ‘‘போர் செய்வது உங்கள் மீது விதிக்கப்பட்டால் நீங்கள் போர் செய்யாமல் (விலகி) இருந்து விடுவீர்களா?'' என்று கேட்டார். (அதற்கு) அவர்கள் ‘‘எங்கள் மக்களையும், எங்கள் வீடுகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்க, (எங்களை வெளியேற்றிய) அவர்களிடம் அல்லாஹ்வுடைய பாதையில் நாங்கள் போர் செய்யாதிருக்க எங்களுக்கென்ன நேர்ந்தது?'' என்று கூறினார்கள். ஆனால், போர் செய்யும்படி கட்டளையிடப்பட்ட பொழுதோ அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள் போர் செய்யாது) பின் சென்றுவிட்டார்கள். (இத்தகைய) அநியாயக்காரர்களை அல்லாஹ் நன்கறிவான்.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70