وَلَكُمْ فِى ٱلْقِصَاصِ حَيَوٰةٌ يَٰٓأُو۟لِى ٱلْأَلْبَٰبِ لَعَلَّكُمْ تَتَّقُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஅறிவாளிகளே! நீங்கள் (பழிவாங்கப்படுவதை) பயந்துகொள்ள வேண்டுமே! பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை(யின் பாதுகாப்பு) உண்டு.
Tamil Translation - Omar Sharifஇன்னும் பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை(யின் பாதுகாப்பு) உண்டு. நிறைவான அறிவுடையவர்களே! நீங்கள் (பழிவாங்கப்படுவதை) பயப்பட வேண்டுமே!
Tamil Translation - Abdulhamid Baqawi179. அறிவாளிகளே! (கொலைக்குப்) பழிவாங்குவதில் உங்களுக்கு வாழ்க்கை உண்டு. (ஏனென்றால், பழிவாங்கி விடுவார்கள் என்ற பயத்தால் கொலை செய்யக் கருதுபவனும், அவனால் கொலை செய்யக் கருதப்பட்டவனும் தப்பித்துக் கொள்ளலாம்.) நீங்கள் (அல்லாஹ் தடுத்தவற்றிலிருந்து விலகி அவனை) அஞ்சிக் கொள்ளுங்கள்.