كُتِبَ عَلَيْكُمْ إِذَا حَضَرَ أَحَدَكُمُ ٱلْمَوْتُ إِن تَرَكَ خَيْرًا ٱلْوَصِيَّةُ لِلْوَٰلِدَيْنِ وَٱلْأَقْرَبِينَ بِٱلْمَعْرُوفِ حَقًّا عَلَى ٱلْمُتَّقِينَ
Tamil Translation - Omar Sharif - Abridged Versionஉங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால்; (மேலும்) அவர் செல்வத்தை விட்டுச் சென்றால் பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நல்ல முறையில் (நீங்கள்) மரணசாசனம் கூறுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டது. (இது) அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீது அவசியமாகும்.
Tamil Translation - Omar Sharifஉங்களில் ஒருவருக்கு மரணம் வந்தால், (மேலும்) அவர் செல்வத்தை விட்டுச் சென்றால் அப்போது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் நல்ல முறையில் (நீங்கள்) மரண சாசனம் கூறுவது உங்கள் மீது கடமையாக்கப்பட்டுள்ளது. (இது) அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் மீது அவசியமாகும்.
Tamil Translation - Abdulhamid Baqawi180. (நம்பிக்கையாளர்களே!) உங்களில் எவருக்கும் மரணம் சமீபித்து அவர் பொருளை விட்டுவிட்டு இறப்பவராகவும் இருந்தால், (அவர் தன்) தாய் தந்தைக்கும், உறவினர்களுக்கும், நியாயமான முறைப்படி (பொருள் சேர்வதற்காக) மரண சாசனம் (கூற) விதிக்கப்பட்டிருக்கிறது. (இது) இறையச்சமுடையவர்கள் மீது கடமையாகும்.