قُولُوٓا۟ ءَامَنَّا بِٱللَّهِ وَمَآ أُنزِلَ إِلَيْنَا وَمَآ أُنزِلَ إِلَىٰٓ إِبْرَٰهِـۧمَ وَإِسْمَٰعِيلَ وَإِسْحَٰقَ وَيَعْقُوبَ وَٱلْأَسْبَاطِ وَمَآ أُوتِىَ مُوسَىٰ وَعِيسَىٰ وَمَآ أُوتِىَ ٱلنَّبِيُّونَ مِن رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهُۥ مُسْلِمُونَ
Tamil Translation - Omar Sharif - Abridged Version(நம்பிக்கையாளர்களே!) கூறுங்கள்: "அல்லாஹ்வையும் எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களுடைய) சந்ததிகளுக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவு(க்கு)ம், ஈஸாவு(க்கு)ம் கொடுக்கப்பட்டதையும், (மற்ற) நபிமார்களுக்கு தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவர் நபியல்ல என்று) பிரிக்க மாட்டோம். நாங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்தவர்கள் (முஸ்லிம்கள்) ஆவோம்."
Tamil Translation - Omar Sharif(நம்பிக்கையாளர்களே!) கூறுங்கள்: “அல்லாஹ்வையும் எங்களுக்கு இறக்கப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் இன்னும் (இவர்களுடைய) சந்ததிகளுக்கு இறக்கப்பட்டதையும், மூஸாவு(க்கு)ம், ஈஸாவு(க்கு)ம் கொடுக்கப்பட்டதையும், (மற்ற) நபிமார்களுக்கு அவர்களது இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நாங்கள் நம்பிக்கை கொண்டோம். அவர்களில் ஒருவருக்கு மத்தியிலும் (அவர் நபியல்ல என்று) பிரி(த்துக் கூறி அவரை நிராகரி)க்க மாட்டோம். நாங்கள் அவனுக்கு முற்றிலும் பணிந்த முஸ்லிம்களாக இருப்போம்.”
Tamil Translation - Abdulhamid Baqawi136. (நம்பிக்கையாளர்களே!) நீங்களும் கூறுங்கள்: ‘‘அல்லாஹ்வையும் எங்களுக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், இப்றாஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஅகூப் ஆகியவர்களுக்கும், அவர்களுடைய சந்ததிகளுக்கும் அருளப்பட்ட அனைத்தையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டிருந்ததையும், (மற்றைய) நபிமார்களுக்கு தங்கள் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டிருந்தவற்றையும் நாங்கள் நம்பிக்கை கொள்கிறோம். அவர்களிலிருந்து எவரையும் (நபியல்ல என்று) பிரித்துவிட மாட்டோம். மேலும், அவனுக்கே நாங்கள் முற்றிலும் பணிந்து வழிப்படுவோம்.''