caseriqதிருக்குர்ஆனில் பொருள் தேடல்

Al-Baqara அத்தியாயம், வசனம் 135

மதீனா · இறக்கப்பட்ட வரிசை 87 · 2:135

وَقَالُوا۟ كُونُوا۟ هُودًا أَوْ نَصَٰرَىٰ تَهْتَدُوا۟ قُلْ بَلْ مِلَّةَ إِبْرَٰهِـۧمَ حَنِيفًا وَمَا كَانَ مِنَ ٱلْمُشْرِكِينَ

Tamil Translation - Omar Sharif - Abridged Version(முஸ்லிம்களை நோக்கி), "நீங்கள் யூதர்களாக அல்லது கிறித்துவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழி பெறுவீர்கள்" எனக் கூறினார்கள். (நபியே) கூறுவீராக! "மாறாக, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை."
Tamil Translation - Omar Sharif(முஸ்லிம்களை நோக்கி), “நீங்கள் யூதர்களாக அல்லது கிறித்தவர்களாக ஆகிவிடுங்கள், நேர்வழி பெறுவீர்கள்” என அவர்கள் கூறுகிறார்கள். (நபியே!) கூறுவீராக: “மாறாக, இஸ்லாமிய மார்க்கத்தில் உறுதியுடையவரான இப்ராஹீமின் மார்க்கத்தையே நாங்கள் பின்பற்றுவோம். அவர் இணைவைப்பவர்களில் இருக்கவில்லை.”
Tamil Translation - Abdulhamid Baqawi135. (நம்பிக்கையாளர்களை நோக்கி) ‘‘நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக ஆகிவிடுங்கள். நேரானவழியை அடைந்து விடுவீர்கள்'' என அவர்கள் கூறுகிறார்கள். அதற்கு, ‘‘இல்லை! நேரான வழியைச் சார்ந்த இப்றாஹீமின் மார்க்கத்தையே (பின்பற்றுவோம்). அவர் (உங்களைப்போல்) இணைவைத்து வணங்கியவர்களில்'' இல்லை என்று (நபியே!) கூறுவீராக.
ஒரு தலைப்பைத் தேடுகிறீர்களா? பொருள் தேடலை முயற்சிக்கவும் — உங்கள் கேள்வி 6,236 வசனங்களில் தேடப்படும்.
மொழி — 70